தேசிய செய்திகள்

மனிதகுல மூலதன குறியீட்டில் 157 நாடுகளில் 115 இடம் : இந்திய அரசு புறக்கணிப்பு + "||" + Ranked at 115 out of 157 economies, India rejects World Bank's report on Human Capital Index

மனிதகுல மூலதன குறியீட்டில் 157 நாடுகளில் 115 இடம் : இந்திய அரசு புறக்கணிப்பு

மனிதகுல மூலதன குறியீட்டில் 157 நாடுகளில் 115 இடம்  : இந்திய அரசு புறக்கணிப்பு
மனிதகுல மூலதன குறியீட்டில் 157 நாடுகளில் 115 இடம். உலக வங்கி அறிக்கையை இந்தியா புறக்கணித்தது.

 மனிதகுல மூலதன குறியீட்டின்  எச்சிஐ.  (HCI) உலக வங்கியின் அறிக்கையை இந்தியா நிராகரித்து உள்ளது. உலக வங்கி வெளியிட்டு உள்ள மனித மூலதன குறியீட்டு பட்டியலில் நேபாளம், இலங்கை, மியான்மார் மற்றும் வங்காளதேசத்தை விட குறைந்து  157 நாடுகளில் 115 வது  இடத்தில் உள்ளது.

உலக வங்கி, அதன் முதல் அறிக்கையில் எச்சிஐ. ( HCI) குழந்தை இறப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அளவு கோல்கள்  மீது 157 பொருளாதாரங்களை மதிப்பிட்டது.

இது குறித்து நிதி அமைச்சகம்  தெரிவித்துள்ள ஒரு அறிக்கையில்,

நாட்டில் மனித மூலதனத்தை வளர்த்துக் கொள்வதற்காக எடுக்கப்பட்ட முக்கிய முயற்சிகளை இந்தியாவின் எச்சிஐ ( HCI) ஸ்கோர் பிரதிபலிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

19.7 கோடி பள்ளி  மாணவர்களின் நலனுக்கான கல்வி மற்றும் தரத்தில் கவனம் செலுத்துவதற்காக சமாக்கிர ஷிக்சா அபிஹான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

”ஆயுஷ்மன் பாரத் திட்டம் மூலம், இந்தியா தற்போது உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை 50 கோடி  குடிமக்களுக்கு  போதுமான சுகாதார பாதுகாப்புடன் வழங்கியுள்ளது. மற்றும் 150,000 சுகாதார மையங்களை ஆரோக்கிய மையங்களாக மாற்றுவதற்கு விரிவான ஆரம்ப சுகாதார சேவைகள் வழங்கி வருகிறது"

பிரதான் மந்திரி உஜ்ஜ்வல யோஜனா திட்டம் மூலம் சுமார் 3.8 கோடி  பெண்களுக்கு  எரிபொருள் மற்றும் கரி அடிப்படையிலான சமையல் அடுப்புகளுக்கு பதிலாக எல்பிஜி இணைப்பு வழங்குவதன் மூலம்  சுகாதாரத்தை மேம்படுத்தி உள்ளது.

சேமிக்கும்  திட்டத்துடன் தொடர்ந்து பிரதான் மந்திரி ஜந்தன் யோஜனா மூலம்  32.8 கோடி  நபர்களுக்கு முறையான வங்கிச்சேவை சேவைகளை வழங்கியுள்ளது. கிராமப்புற பெரியவர்களிடையே  வங்கி கணக்கு   2011 ல் 33 சதவீதத்திலிருந்து  2017 ல் 79 சதவீதமாக உயர்ந்து இரட்டிப்பாகி உள்ளது.

ஆதார்   அமைப்பு மூலம்  இந்தியாவில் 6400 கோடி  டாலர்கள்  நிதி உதவி  நேரடியாக குடிமக்களுக்கு கிடைக்க  உதவியுள்ளது. இதனால் ஆளுமை மற்றும் சமூக பாதுகாப்பு மேம்பாடு அடைந்து உள்ளது.

ஆகையால் இந்திய அரசாங்கம், எச்சிஐ ( HCI) அறிக்கையை புறக்கணிக்க முடிவு செய்ததோடு மனிதகுல மூலதன வளர்ச்சிக்கான அதன் பாதை முறிவுத் திட்டத்தை தொடர்ச்சியாக நிறைவேற்றுவதோடு அனைத்து குழந்தைகளுக்கும் வெளிப்படையான  மற்றும் தரமான வாழ்க்கையை விரைவாக மாற்றியமைக்கும் நோக்கம் கொண்டு உள்ளது என கூறப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. உலக வங்கி தலைவர் பதவிக்கு டேவிட் மால்பாஸ் என்பவரை முன்னிறுத்தினார் டிரம்ப்
உலக வங்கி தலைவர் பதவிக்கு டேவிட் மால்பாஸ் என்பவரை டொனால்டு டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.
2. உத்தண்டியில் உலக வங்கி அதிகாரி வீட்டில் ரூ.25 லட்சம் தங்கம், வைர நகைகள் கொள்ளை
உத்தண்டியில், உலக வங்கி அதிகாரி வீட்டில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
3. இந்தியாவின் ஜிடிபி 7.3 சதவீதமாக உயரும் என எதிர்பார்ப்பு: உலக வங்கி கணிப்பு
இந்தியாவின் ஜிடிபி 7.3 சதவீதமாக உயரும் என உலக வங்கி கணித்துள்ளது.
4. உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் ராஜினாமா
உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஜனவரி மாத இறுதியுடன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கிம் அறிவித்துள்ளார்.
5. தொழில் நடத்த சாதகமான நாடுகளில் இந்தியா 77-வது இடம் தென்கிழக்கு ஆசியாவில் முதல் இடம்
உலக வங்கி ஆய்வறிக்கை ஒன்றின்படி சர்வதேச அளவில் தொழில் நடத்த சாதகமான நாடுகளில் இந்தியா 23 படிகள் முன்னேறி 77-வது இடத்திற்கு வந்து இருக்கிறது.