மாநில செய்திகள்

புதிய தலைமைச்செயலக கட்டிடம் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை + "||" + Two judges of the High Court have been banned for Subramaniam directive

புதிய தலைமைச்செயலக கட்டிடம் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை

புதிய தலைமைச்செயலக கட்டிடம் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை
புதிய தலைமைச் செயலக கட்டிடம் விவகாரத்தில் குற்றவியல் விசாரணைக்கு பரிந்துரைத்த தனி நீதிபதி உத்தரவுக்கு உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை விதித்துள்ளது.
சென்னை,

புதிய தலைமைச்செயலக கட்டிடம்  கட்டுவதில் முறைகேடு புகாரில் 2011-ம் ஆண்டு ரகுபதி ஆணையம் அமைக்கப்பட்டது. 

தலைமைச்செயலக கட்டிட விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை பரிந்துரைக்கு எதிராக ஸ்டாலின் முறையீடு செய்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி குலுவாடி ஜி. ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

ரகுபதி ஆணைய விசாரணை அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க பரிந்துரைத்ததை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டது. ரகுபதி ஆணையம் திரும்பப்பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் குற்றவியல் விசாரணைக்கு தனி நீதிபதி பரிந்துரைத்தார்.

புதிய தலைமைச்செயலக கட்டட விவகாரத்தில் குற்றவியல் விசாரணைக்கு பரிந்துரைத்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.