தேசிய செய்திகள்

"தமிழகத்தில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு யாருடைய நிர்பந்தமும் காரணம் இல்லை" தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் பேட்டி + "||" + There is no reason for the insistence of the byelection being postponed OPRawat

"தமிழகத்தில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு யாருடைய நிர்பந்தமும் காரணம் இல்லை" தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் பேட்டி

"தமிழகத்தில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு யாருடைய நிர்பந்தமும் காரணம் இல்லை" தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் பேட்டி
"தமிழகத்தில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு யாருடைய நிர்பந்தமும் காரணம் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக கடந்த 6-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம்  அறிவித்தது.

இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்படுவதற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, பருவமழை காரணமாக தற்போதைக்கு 2 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்க வேண்டாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியதால் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில்,  "தமிழகத்தில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத், தந்தி டி.வி-க்கு பிரத்யேக பேட்டி அளித்தார். 

இது தொடர்பாக ஓ.பி ராவத் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு யாருடைய நிர்பந்தமும் காரணம் இல்லை.  திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான தேர்தல் வழக்கு முடிந்தால் தான் தொகுதி காலியானதாக அறிவிக்க முடியும்.  வழக்கு 23-ஆம் தேதி நிறைவடைந்தால், 2 தொகுதிகளுக்கும் ஜனவரிக்குள் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் குறித்த மனு நிலுவையில் இருப்பதால் கருத்து கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.