தேசிய செய்திகள்

மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் பதவி விலக மாட்டார் - தகவல்கள் + "||" + Union Minister of State for External Affairs MJ Akbar will not resign

மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் பதவி விலக மாட்டார் - தகவல்கள்

மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் பதவி விலக மாட்டார் - தகவல்கள்
மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் பதவி விலக மாட்டார் என வெளியுறவுத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி, 

மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர், முன்பு பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். அந்த காலகட்டத்தில் அவர் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சில பெண் பத்திரிகையாளர்கள் தற்போது குற்றம் சாட்டி உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பதில் அளிக்க மறுத்து விட்டார். 

இதற்கிடையே இந்த குற்றச்சாட்டு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “இது தீவிரமான புகார். இதுபற்றி சம்பந்தப்பட்ட மந்திரியும், பிரதமரும் பேச வேண்டும். மவுனமாக இருப்பது சரியல்ல” என்றார்.

எதிர்கட்சிகள் அவர் பதவி விலக கோரிக்கை வைத்து உள்ளனர். இந்த நிலையில்  எம்.ஜே அக்பர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள்  ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்றும் அவர் பதவி விலக மாட்டார் என்றும்  வெளியுறவுத்துறை  வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அக்பர், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார் எனவும் , அவரது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை குறைக்க மாட்டார் என்றும், மேலும் அமைச்சர், இப்போது இக்குவடோரியல் கினியாவுக்குச் சென்று உள்ளார் எனவும் அவர் வருகிற ஞாயிற்று கிழமை இந்தியா திரும்புவார் எனவும் தெரிவித்து உள்ளன. அக்பரை எந்த வித விசாரணையோ புகாரோ இல்லாமல் நீக்க முடியாது எனதெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. எம்.ஜே அக்பர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்க பெண் பத்திரிகையாளர் குற்றச்சாட்டு
'பாலியல் ரீதியாகவும், வாய்மொழியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் அவர் என்னைத் துன்புறுத்தினார் என அமெரிக்க பெண் பத்திரிகையாளர் ஒருவர் முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே அக்பர் மீது கற்பழிப்பு குற்றஞ்சாட்டி உள்ளார்.
2. மீடூ விவகாரத்தில் சின்மயிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆதரவு
மீடூ விவகாரத்தில் சின்மயிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
3. எனக்கு எதிரான மீடூ பாலியல் புகார்கள் ஜோடிக்கப்பட்டது; சட்டப்படி நடவடிக்கை - மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் எச்சரிக்கை
எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானது மற்றும் ஜோடிக்கப்பட்டது என மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் கூறியுள்ளார்.
4. மீடூ விவகாரம்: பி.சி.சி.ஐ. தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மீது பாலியல் குற்றச்சாட்டு
மீடூ விவகாரத்தில் பி.சி.சி.ஐ. தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள ராகுல் ஜோஹ்ரி மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் குற்றஞ்சாட்டி உள்ளார். #MeToo
5. மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது அமெரிக்காவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் பாலியல் புகார்
அமெரிக்காவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் தான் 18 வயதாக இருக்கும் போது எம்.ஜே.அக்பர் எனது வாயில் முத்தமிட்டார் என குற்றஞ்சாட்டி உள்ளார். #metoo