மாநில செய்திகள்

ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் மறைவு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு பேரிழப்பு - மு.க.ஸ்டாலின் + "||" + Shankar's death is a rural poor and poor students MKStalin

ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் மறைவு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு பேரிழப்பு - மு.க.ஸ்டாலின்

ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் மறைவு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு பேரிழப்பு - மு.க.ஸ்டாலின்
ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னை அண்ணா நகரில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி பயிற்சி மையம் நடத்தி வந்தவர் சங்கரன் (வயது45). திருச்செங்கோடு அருகே உள்ள நல்லகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த இவர் மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி அவென்யூவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இவருக்கும் மனைவிக்கும் சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

நேற்று வழக்கம் போல் அண்ணாநகரில் உள்ள பயிற்சி மையத்துக்கு வந்து விட்டு இரவில் வீட்டுக்கு சென்றார். அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது கோபத்தின் உச்சிக்கு சென்ற சங்கர் மனம் வெறுத்து வீட்டில் மின் விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டார்.

இதை கண்ட அவரது மனைவி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் துணையுடன் சங்கர் உடலை இறக்கி அருகில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை பார்த்து மனைவியும் 2 குழந்தைகளும் கதறி அழுதனர்.

அவரது உடல் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு நடந்து வருகிறது. ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. உள்பட பலர் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

குறுகிய காலத்தில் புகழ் பெற்ற சங்கர் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் 900-க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று மத்திய- மாநில அரசு பணிகளில் பல்வேறு நிலைகளில் அதிகாரிகளாக உள்ளனர். இப்போது 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இவரது மையத்தில் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில்,  சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி பயிற்சி மையம் நிறுவனர் சங்கரன் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

நாட்டின் நிர்வாக கட்டமைப்புக்கு தேவையான 1000-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் என பல அரசு அதிகாரிகளை உருவாக்கியவர் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர். சங்கர் மறைவு கிராமங்களில் இருந்து அகில இந்திய தேர்வுகளை எழுத விரும்பிய ஏழை, எளிய மாணவர்களுக்கு பேரிழப்பாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி தவறான மனிதர்கள் தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
நரேந்திரமோடி, எடப்பாடி பழனிசாமி தவறான மனிதர்கள் என்று முசிறியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
2. ஜி.எஸ்.டி. வந்த பிறகு தமிழகத்தில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஜி.எஸ்.டி. வந்த பிறகு தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன என்று முசிறியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
3. பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமியும் வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை வரும் மு.க.ஸ்டாலின் பேச்சு
பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமியும் வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை வரும் என்று தஞ்சையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
4. கருணாநிதி பிறந்த தொகுதி என்ற உரிமையில் வாக்கு கேட்க வந்துள்ளேன் திருக்காரவாசலில், மு.க.ஸ்டாலின் பேச்சு
கருணாநிதி பிறந்த தொகுதி என்ற உரிமையில் வாக்கு கேட்க வந்துள்ளேன் என்று திருக்காரவாசலில், மு.க.ஸ்டாலின் கூறினார்.
5. தேர்தல் அறிக்கையில் திருத்தம்: அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் மு.க.ஸ்டாலின் பேச்சு
கூட்டணி கட்சி தலைவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். தேர்தல் அறிக்கையிலும் இது குறித்து திருத்தம் செய்யப்படும் என திருவாரூரில், மு.க.ஸ்டாலின் கூறினார்.