தேசிய செய்திகள்

குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம் + "||" + Gujarat Sardar Vallabhbhai Patel's 'Statue of Unity' at Narmada bank being given final touches

குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்

குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்
குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அகமதாபாத்,

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேல். இந்தியாவில் பிரிந்து கிடந்த 600-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை நிர்மாணித்தவர் என்ற வரலாற்றுச் சிறப்பு அவருக்கு உண்டு.

குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக நரேந்திர மோடி பதவிவகித்த போது சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் 182 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிகப்பெரிய ஒரு சிலையை உருவாக்க கடந்த 2013-ம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது.

2,603 கோடி ரூபாய் செலவில் இந்தச் சிலையை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா குஜராத் மாநில அந்நாள் முதல் மந்திரி நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்றது. இந்த சிலையை அமைப்பதற்காக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மண், இரும்பு உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

குஜராத் மாநிலம் நர்மதை ஆற்றில் சர்தார் சரோவர் அணையின் நீர்த்தேக்கத்துக்கு நடுவே தீவுப் பகுதியில் 597அடி உயரமுள்ள வல்லப் பாய் பட்டேல் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

5700 டன் உருக்கு, 22,500 டன் வெண்கலத் தகடுகள், 75ஆயிரம் கனமீட்டர் சிமென்ட் காங்கிரீட் ஆகியன இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.  இந்தச் சிலையின் உட்புறத்திலேயே அருங்காட்சியகம், காட்சி மாடம் ஆகியவை அமைக்கப்படுகின்றன. அடிப்பகுதியில் இருந்து உச்சிக்குச் சென்றுவர லிப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 

அக்டோபர் 31ஆம் நாள் சர்தார் வல்லப் பாய் பட்டேலின் பிறந்த நாளன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தச் சிலையைத் திறந்து வைக்க உள்ளார்.  இதற்காகச் சிலையின் வெளிப்புறத்தில் மெருகூட்டும் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றது.