மாநில செய்திகள்

சின்மயி புகார் தந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் + "||" + Chinmayi If you complain Action Pantiyarajan

சின்மயி புகார் தந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சின்மயி புகார் தந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
சின்மயி புகார் தந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
சென்னை,

டுவிட்டரில் '#MeToo' என்ற ஹேஸ்டேக் மூலம் , பல பெண்கள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதில் பல பிரபலங்கள் சிக்கியுள்ளனர். 

பாலிவுட் நடிகர் நானா படேகர், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பலர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.  பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் பாடகி சின்மயி, பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான தகவல்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்கள். 

இந்நிலையில், இந்த புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த குழுவில் மூத்த நீதிபதிகள், சட்ட நிபுணர்கள் இடம்பெறுவார்கள் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில்,

MeToo விவகாரம் தமிழகத்துக்கு தாமதமாக வந்துள்ளது. சின்மயி புகார் தந்தால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை காவல்துறை எடுக்கும் என கூறியுள்ளார்.