தேசிய செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டுக்கள் உண்மையானால் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் - மத்திய அமைச்சர் + "||" + MJ Akbar should resign if allegations against him are true Ramdas Athawale

பாலியல் குற்றச்சாட்டுக்கள் உண்மையானால் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் - மத்திய அமைச்சர்

பாலியல் குற்றச்சாட்டுக்கள் உண்மையானால் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் - மத்திய அமைச்சர்
பாலியல் குற்றச்சாட்டுக்கள் உண்மையானால் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கூறியுள்ளார்.

ராஞ்சி, 


பிரபல பத்திரிக்கையாளர்களாக இருந்து, பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் என பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைதியாக இருப்பது ஏன்? அவர் விளக்கமளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. 

இதற்கிடையே மத்திய அமைச்சர்களாக இருக்கும் சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன் ஆகியோர் மத்திய அமைச்சருக்கு எதிரான விவகாரம் தொடர்பாக பதிலளிக்க மறுத்துவிட்டனர். மேனகா காந்தி மட்டும் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பத்திரிக்கையாளர்கள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர்தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று ஸ்மிரிதி இரானி கூறினார். இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் உண்மையானால் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் என்று மற்றொரு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கூறியுள்ளார். 

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ராம்தாஸ் அதவாலே செய்தியாளர்களிடம் பேசுகையில்,  எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவர் பதிலளிக்கையில், மந்திரி எம்.ஜே.அக்பர் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அவரது விளக்கத்தையும் நாம் கேட்க வேண்டும். பின்னர் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும். அதில் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் பதவி விலக வேண்டும் என்றார். 
 
நடிகரோ அல்லது அரசியல்வாதியோ யாராக இருந்தாலும் பெண்களுக்கு கேடு விளைவிக்க உரிமை இல்லை என்று கூறிய அதவாலே, அதேநேரம் இதுபோன்ற புகார்கள் மூலம் அரசியல்வாதி அல்லது நடிகர்களின் புகழை வேண்டுமென்றே கெடுக்க நினைப்போரையும் போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 


தொடர்புடைய செய்திகள்

1. பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா
பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா செய்தார்.
2. மீடூ விவகாரம்; மத்திய மந்திரி அக்பர் மீது இன்று 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு
பெண் பத்திரிகையாளருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்த மத்திய மந்திரி அக்பர் மீது இன்று கூடுதலாக 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளனர்.
3. பாலியல் குற்றச்சாட்டு; காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தேசிய தலைவர் பதவி விலகல்
பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தேசிய தலைவர் பைரோஸ் கானின் பதவி விலகலை ராகுல் காந்தி ஏற்று கொண்டார்.
4. பாலியல் குற்றச்சாட்டு: இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஐ.சி.சி. கூட்டத்தில் பங்கேற்க தடை
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி, ஐ.சி.சி. கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
5. பெண் பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவா? எம்.ஜே. அக்பருக்கு ஆதரவா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி
மீடூ பாலியல் புகார்கள் விவகாரத்தில் பெண் பத்திரிக்கையாளர்களுடன் உள்ளீர்களா? எம்.ஜே. அக்பருடன் உள்ளீர்களா? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.