தேசிய செய்திகள்

தித்லி புயலால் 60 லட்சம் பேர் பாதிப்பு; ஒடிசாவில் வெள்ளம், நிவாரணப் பணிகளில் அரசு தீவிரம் + "||" + Over 60 lakh hit by cyclone, flood in Odisha, govt steps up relief ops

தித்லி புயலால் 60 லட்சம் பேர் பாதிப்பு; ஒடிசாவில் வெள்ளம், நிவாரணப் பணிகளில் அரசு தீவிரம்

தித்லி புயலால் 60 லட்சம் பேர் பாதிப்பு; ஒடிசாவில் வெள்ளம், நிவாரணப் பணிகளில் அரசு தீவிரம்
ஒடிசாவில் தித்லி புயலால் 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புவனேஷ்வர்,

 வங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே வியாழக்கிழமை காலை கரையை கடந்தது. இதன் காரணமாக வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஒடிசாவில் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அம்மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
புயலை அடுத்து பெய்த கனமழை காரணமாக ஒடிசாவின் கஞ்சம், கஜாபதி, ராயகாடா உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மூன்று நாட்களாக பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில் ஒடிசா மாநில அரசு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழு, ஒடிசா மாநில சிறப்பு படைப்பிரிவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

பாலசோர் மாவட்ட மக்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் மற்றும் வெள்ளம் என இரட்டை இயற்கை பேரிடரை எதிர்க்கொண்டுள்ள மக்களை வெளியேற்றவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் மாவட்ட நிர்வாகங்களுக்கும் ஒடிசா முதல்வர் நவின் பாட்நாயக் உத்தரவிட்டுள்ளார். நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை செய்துக்கொடுக்கவும், வெள்ளத்தினால் சேதம் அடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை சரிசெய்யவும் உத்தரவிட்டுள்ள நவீன் பாட்நாயக் நிலை குறித்து அவ்வப்போது வீடியோ கால் மூலம் ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை
ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை நடத்தப்பட்டது.
2. ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் தேர்தல் அதிகாரி படுகொலை
ஒடிசாவின் கந்தமாலில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் தேர்தல் அதிகாரி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
3. ஒடிசாவில் மர்ம நபர்களால் பா.ஜனதா தலைவர் சுட்டுக் கொலை
ஒடிசாவில் மர்ம நபர்களால் பா.ஜனதா கட்சியின் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
4. ஒடிசாவின் அடர்ந்த காட்டுப்பகுதியில் 15 கி.மீ. தூரம் நடந்து சென்ற தேர்தல் பணியாளர்கள்
மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலால் வாகனப்பயணம் தவிர்ப்பு. ஒடிசாவின் அடர்ந்த காட்டுப்பகுதியில் 15 கி.மீ. தூரம் தேர்தல் பணியாளர்கள் நடந்து சென்றார்கள்.
5. மாவோயிஸ்டுகள் மிரட்டலால் ஒரு வாக்கு கூட பதிவாகாத 2 வாக்குச்சாவடிகள்
மாவோயிஸ்டுகள் மிரட்டல் காரணமாக ஒடிசாவில் இரண்டு வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குகூட பதிவாகவில்லை.