மாநில செய்திகள்

முதல்வர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் - பொன்னையன் + "||" + Madras HC orders CBI probe into graft charges against TN CM

முதல்வர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் - பொன்னையன்

முதல்வர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் - பொன்னையன்
முதல்வர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார்.


சென்னை,


நெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக திமுக தொடர்ந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்த நிலையில் வழக்கை சிபிஐ விசாரித்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், முதல்வர் மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். லஞ்ச ஒழிப்புத்துறை விசரித்த நிலையில் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது தவறு. நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. வழக்கமான டெண்டர் வேறு, எனோடிக் டெண்டர் வேறு. சாலை போடுவதற்கும் பராமரிப்பு செய்வதற்கும் சேர்த்தே டெண்டர் விடப்பட்டுள்ளது. திமுக ஆட்சியைவிட அதிமுக ஆட்சியில்தான் குறைந்த விலைக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

 தற்போது டெண்டர் வழங்கப்பட்டுள்ள நிறுவனத்திற்கு, திமுக ஆட்சியில் 10-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் பொன்னையன் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. மக்களவை தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
மக்களவை தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2. பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு : சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.
4. மேற்கு வங்காள டிஜிபி ராஜீவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு
மேற்கு வங்காள டிஜிபி ராஜீவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேற்கு வங்காள அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
5. மேற்கு வங்காளத்தில் சிபிஐ அலுவலகங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் குவிப்பு
மேற்கு வங்காளத்தில் சிபிஐ அலுவலகங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.