மாநில செய்திகள்

தமிழக அரசியலில் இருந்து அ.தி.மு.க., தி.மு.க.வை அகற்றுவோம் -கமல்ஹாசன் + "||" + ADMK - DMK Remove - Kamal

தமிழக அரசியலில் இருந்து அ.தி.மு.க., தி.மு.க.வை அகற்றுவோம் -கமல்ஹாசன்

தமிழக அரசியலில் இருந்து அ.தி.மு.க., தி.மு.க.வை அகற்றுவோம் -கமல்ஹாசன்
தமிழக அரசியலில் இருந்து, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை அகற்றுவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சேலம்,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “மக்களுடனான பயணம்“ என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை நேரில் சந்தித்து உரையாற்றி வருகிறார். கன்னியாகுமாரி, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும், கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள், நெசவாளர்களுடன் கலந்துரையாடினார்.


இந்நிலையில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து உரையாற்றி வருகிறார்.

இதில் சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கமல்ஹாசன் பேசுகையில், “ மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இருக்கிறது. அனைத்து கட்சிகளும் கல்லூரிகளில் அரசியல் பேசினாலும் தவறில்லை.

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதன் மூலம் அங்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையக் கூடிய வாய்ப்பு உண்டு. அதனால் அந்த கூட்டணி உடையும் பட்சத்தில் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம்  காங்கிரசுடன் இணைந்து போட்டியிடும். மேலும் அதிமுக மற்றும் திமுகவை தமிழக அரசியலில் இருந்து அகற்ற மக்கள் நீதி மய்யம் பாடுபடும். திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காது” என்று அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கட்சி அலுவலகத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை: அ.தி.மு.க.-அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு
தேனியில் அ.தி.மு.க. மாவட்ட தலைமை அலுவலகத்தை உரிமை கொண்டாடுவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அ.தி.மு.க., அ.ம.மு.க. நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2. டி.டி.வி.தினகரனை சேர்த்தால் அ.தி.மு.க.வுக்கு பலம் கூடும் - சூலூர் கனகராஜ் எம்.எல்.ஏ. பேட்டி
டி.டி.வி.தினகரனை சேர்த்தால் அ.தி.மு.க.வுக்கு பலம் கூடும் என்று சூலூர் கனகராஜ் எம்.எல்.ஏ. கூறினார்.
3. தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடும் என்று பயந்தே அ.தி.மு.க. அரசை கலைக்க வில்லை; மத்திய அரசு மீது சாத்தூர் ராமச்சந்திரன் குற்றச்சாட்டு
தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடும் என்று பயந்தே அ.தி.மு.க. அரசை கலைக்காமல் மத்திய அரசு விட்டு வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
4. அ.தி.மு.க.விற்கு தேர்தல் பயம் கிடையாது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
அ.தி.மு.க.விற்கு தேர்தல் பயம் கிடையாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.
5. சபாநாயகர் தனபாலை நீக்குவது தொடர்பாக கருணாஸ் மனு: சட்டசபை கூடும்போது திமுக பரிசீலிக்கும்- தி.மு.க எம். எல்.ஏ
சபாநாயகர் தனபாலை நீக்கக் கோரி சட்டப்பேரவை செயலாளருக்கு எம்.எல்.ஏ கருணாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் மனு அளித்து உள்ளனர். #DMK #AIADMK