மாநில செய்திகள்

அ.தி.மு.க. 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் + "||" + AIADMK 47th Anniversary Opening Ceremony

அ.தி.மு.க. 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்

அ.தி.மு.க. 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்
அ.தி.மு.க. 47-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி 17-ந் தேதி சிவகாசியில் நடக்கும் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், உளுந்தூர்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி பேசுகின்றனர்.
சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. தொடங்கி 46 ஆண்டுகள் நிறைவடைந்து, 17-ந் தேதி 47-வது ஆண்டு தொடங்குவதைக் கொண்டாடும் வகையில், 17-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அ.தி.மு.க. 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா மற்றும் டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி

மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அணி நிர்வாகிகளுடன் இணைந்து, பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும். தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 17.10.2018 அன்று ஆங்காங்கே கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி, அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க நாளை சிறப்பாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

17-ந் தேதி சிவகாசியில் நடைபெறும் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்கிறார். அன்றைய தினம் உளுந்தூர்பேட்டையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.