தேசிய செய்திகள்

அடுக்கடுக்கான பாலியல் புகார்: ‘மீ டூ’ இயக்கத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு + "||" + Sexual Complaint: Rahul Gandhi supports 'Me Too'

அடுக்கடுக்கான பாலியல் புகார்: ‘மீ டூ’ இயக்கத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

அடுக்கடுக்கான பாலியல் புகார்: ‘மீ டூ’ இயக்கத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு
அடுக்கடுக்கான பாலியல் புகார் காரணமாக, மீ டூ’ இயக்கத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் உண்மையை உரக்க சொல்லும் நேரம் இது என கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

பணித்தலங்களிலும், பிற இடங்களிலும் ஆண்களால் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து சமீப காலமாக பெண்கள் தைரியமாக புகார் கூறி வருகின்றனர். சர்வதேச அளவில் ‘மீ டூ’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் கடந்த சில நாட்களாக இப்படிப்பட்ட புகார்கள் குவிந்து வருகின்றன.


இதில் சினிமாத்துறையில் பணியாற்றும் ஏராளமான பெண்கள் ‘மீ டூ’ என்ற பெயரில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்து வருகின்றனர். எனினும் அரசியல் துறையையும் இது விட்டு வைக்கவில்லை. அந்தவகையில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பரும் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். இதனால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இப்படி பாலியல் புகாரை துணிச்சலுடன் தெரிவிக்க வழிவகுத்திருக்கும் இந்த ‘மீ டூ’ இயக்கத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இது குறித்து நேற்று அவர் தனது ‘டுவிட்டர்’ தளத்தில் கூறுகையில், ‘பெண்களை மதிப்புடனும், கண்ணியத்துடனும் நடத்துவதை ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. அப்படி இல்லாதவர்களுக்கு இங்கு இடமில்லை என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். மாற்றத்தை கொண்டு வரும்பொருட்டு உண்மையை தெளிவாகவும், உரக்கவும் சொல்லும் நேரம் இது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

எனினும் மத்திய மந்திரி எம்.ஜே.அக்பருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து எந்த கருத்தையும் ராகுல் காந்தி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. உயர் அதிகாரிகள் மீது தூர்தர்‌ஷன் பெண் ஊழியர்கள் பாலியல் புகார்
டெல்லி தூர்தர்‌ஷனில் பணிபுரியும் 2 பெண் ஊழியர்களும், போபால் தூர்தர்‌ஷன் பெண் ஊழியர் ஒருவரும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
2. பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய திருவண்ணாமலை மாணவி மீண்டும் கல்லூரியில் சேர்க்ககோரி மனு
பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய திருவண்ணாமலை வேளாண் கல்லூரி மாணவி மீண்டும் தன்னை கல்லூரியில் சேர்க்ககோரி கோவை வேளாண் பல்கலைக் கழக பாதுகாப்புத்துறை அதிகாரியிடம் மனு கொடுத்தார்.
3. பாலியல் புகாரில் நீக்கப்பட்ட ஆயுதப்படை உயர் அதிகாரிக்கு மீண்டும் பணி இல்லை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
பாலியல் புகாரில் நீக்கப்பட்ட ஆயுதப்படை உயர் அதிகாரிக்கு மீண்டும் பணி இல்லை என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. கல்லூரி மாணவி பாலியல் புகார்: மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் சாட்சிகளிடம் ரகசிய விசாரணை மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு
கல்லூரி மாணவி பாலியல் புகார் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் சாட்சிகளிடம் ரகசிய விசாரணை நடத்த மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டுள்ளார்.
5. ஆராய்ச்சி மாணவியிடம் செல்போனில் ஆபாச பேச்சு: நெல்லை பல்கலைக்கழக பேராசிரியர் மீது பாலியல் புகார் உயர்மட்ட குழு அமைத்து விசாரணை
நெல்லை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.