தேசிய செய்திகள்

காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டு கொலை + "||" + Militant killed in encounter in J&K's Pulwama district

காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டு கொலை

காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதியை சுட்டு கொன்றனர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் இன்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  காஷ்மீர் மாநில சிறப்பு அதிரடி படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருடன் இணைந்து ராணுவம் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டது.

அவர்கள் இந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  இந்நிலையில், பதுங்கி இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.  இதற்கு பாதுகாப்பு படையும் பதிலடி தந்தது.

இந்த என்கவுண்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான்.  அங்கிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  இதனை அடுத்து தேடுதல் வேட்டை நிறைவடைந்து உள்ளது என தகவல்கள் தெரிவித்துள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2. ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் இன்று சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
3. காஷ்மீரில் சோபியான் பகுதியில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரில் சோபியான் பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
4. சட்டீஸ்காரில் மாவட்ட ரிசர்வ் படை என்கவுண்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டு கொலை
சட்டீஸ்காரில் மாவட்ட ரிசர்வ் படையினரின் என்கவுண்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
5. என்கவுண்டரில் குற்றவாளிகளே கொல்லப்படுகின்றனர்; உத்தர பிரதேச மந்திரி பேச்சு
உண்மையான குற்றவாளிகளே முதல் மந்திரி யோகி அரசில் என்கவுண்டர் செய்யப்படுகின்றனர் என மந்திரி தரம்பால் சிங் கூறியுள்ளார்.