உலக செய்திகள்

ஐநா மனித உரிமை கவுன்சில் போட்டியில் 2 மடங்கு ஆதரவுடன் இந்தியா வெற்றி + "||" + India wins election to UNHRC with highest votes

ஐநா மனித உரிமை கவுன்சில் போட்டியில் 2 மடங்கு ஆதரவுடன் இந்தியா வெற்றி

ஐநா மனித உரிமை கவுன்சில் போட்டியில் 2 மடங்கு ஆதரவுடன் இந்தியா வெற்றி
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இடம்பெறுவதற்கான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. #UNHRC
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதற்கு மேலும் 5 நாடுகளை தேர்வு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. 97 வாக்குகளை பெறுவதன் மூலம் மனித உரிமை அவைக்கு உறுப்பினராக தேர்வாக முடியும். ஆசிய பசிபிக் நாடுகளுக்கான பிரிவில் நடந்த ரகசிய ஓட்டெடுப்பில் இந்தியாவுக்கு மொத்தமுள்ள 193 நாடுகளில் 188 நாடுகளின் வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து அதிக வாக்குகள் பெற்று இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இடம்பெற குறைந்தபட்சம் 97 ஓட்டுகள் தேவைப்பட்ட நிலையில், இருமடங்கு வாக்குகளுடன் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தியா இடம்பிடித்துள்ளது. இதனிடையே,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இந்தியா இடம்பெற்றுள்ளதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் பக்ரைன், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் மற்றும் பிஜி நாடுகளும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளன.தொடர்புடைய செய்திகள்

1. ஐநா சுற்றுசூழல் அமைப்பின் தலைவர் ராஜினாமா : நெருக்கடிக்கு பணிந்தார் !
ஐநா சுற்றுசூழல் அமைப்பின் தலைவர் எரிக் சோல்ஹீம் ராஜினாமா செய்துள்ளார்.
2. ஐநா சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் தலைவராக இந்தியர் நியமனம்
ஐக்கிய நாடுகள் சபையின் துணை பொதுச்செயலாளராக இந்தியாவை சேர்ந்த சத்யா.எஸ். திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.
3. ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் மறைவு
ஐ.நா. சபை முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் 80 வயதில் காலமானார்.