தேசிய செய்திகள்

எம்.ஜே. அக்பருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்படும்- அமித் ஷா + "||" + Charges against MJ Akbar to be examined Amit Shah

எம்.ஜே. அக்பருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்படும்- அமித் ஷா

எம்.ஜே. அக்பருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்படும்- அமித் ஷா
மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் புகார் குறித்து பரிசீலிக்கப்படும் என பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறி உள்ளார். #METOO
ஐதராபாத்

பிரபல பத்திரிக்கையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் என பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைதியாக இருப்பது ஏன்? அவர் விளக்கமளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. 

இதற்கிடையே மத்திய அமைச்சர்களாக இருக்கும் சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன் ஆகியோர் மத்திய அமைச்சருக்கு எதிரான விவகாரம் தொடர்பாக பதிலளிக்க மறுத்துவிட்டனர். மேனகா காந்தி மட்டும் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பத்திரிக்கையாளர்கள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர்தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று ஸ்மிரிதி இரானி கூறினார். இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் உண்மையானால் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் என்று மற்றொரு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கூறியுள்ளார். 

இந்த  நிலையில்  எம்.ஜே.அக்பர் விவகாரம் தொடரபாக பாரதீய ஜனதா தேசிய தலைவர்  அமித்ஷா கூறியதாவது;-

எம்.ஜே. அக்பருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்படும்.எம்.ஜே. அக்பருக்கு எதிரான சமூக வலைத் தளங்களில் வந்த குற்றசாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும். எம்.ஜே. அக்பருக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட வேண்டும்.இந்த குற்றச்சாட்டுகள் உண்மையா அல்லது தவறா என்பதைக் காண வேண்டும் என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார்: மகளிர் ஆணையத்தில் நடிகை சுருதி ஹரிகரன் வாக்குமூலம்
நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் தொடர்பாக, மகளிர் ஆணையத்தில் நடிகை சுருதி ஹரிகரன் வாக்குமூலம் அளித்தார்.
2. எம்.ஜே அக்பர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்க பெண் பத்திரிகையாளர் குற்றச்சாட்டு
'பாலியல் ரீதியாகவும், வாய்மொழியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் அவர் என்னைத் துன்புறுத்தினார் என அமெரிக்க பெண் பத்திரிகையாளர் ஒருவர் முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே அக்பர் மீது கற்பழிப்பு குற்றஞ்சாட்டி உள்ளார்.
3. அர்ஜூன் மீது பாலியல் புகார்: நடிகை சுருதி ஹரிகரனுக்கு நடிகர் கிஷோர் ஆதரவு
அர்ஜூன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை சுருதி ஹரிகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் கிஷோர், கருத்து சுதந்திரத்தை யாரும் தடுக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
4. மீடூ விவகாரத்தில் சின்மயிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆதரவு
மீடூ விவகாரத்தில் சின்மயிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
5. எனக்கு எதிரான மீடூ பாலியல் புகார்கள் ஜோடிக்கப்பட்டது; சட்டப்படி நடவடிக்கை - மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் எச்சரிக்கை
எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானது மற்றும் ஜோடிக்கப்பட்டது என மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் கூறியுள்ளார்.