உலக செய்திகள்

பேஸ்புக்கின் 3 கோடி பயனாளர்கள் பிறந்த தேதி, கல்வி வரலாறு, மத விருப்பம், பிற விவரங்கள் திருட்டு + "||" + Facebook mega data leak: Birth dates, education history, religious preferences and other details stolen

பேஸ்புக்கின் 3 கோடி பயனாளர்கள் பிறந்த தேதி, கல்வி வரலாறு, மத விருப்பம், பிற விவரங்கள் திருட்டு

பேஸ்புக்கின் 3 கோடி பயனாளர்கள் பிறந்த தேதி, கல்வி வரலாறு, மத விருப்பம், பிற விவரங்கள் திருட்டு
பேஸ்புக்கில் மிகப்பெரிய கசிவு. 3 கோடி பயனாளர்களின் பிறந்த தேதி, கல்வி வரலாறு, மத விருப்பத் தேர்வுகள் மற்றும் பிற விவரங்கள் திருடப்பட்டுள்ளன.
அமெரிக்க தேர்தல் விவகாரத்தில் பேஸ்புக்கின் பங்களிப்பு இருந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து பேஸ்புக் நிறுவனம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, பேஸ்புக்கில் உள்ள 5 கோடி  வாக்காளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக பிரபல பிரிட்டன் தொலைக்காட்சி சேனல் நியூஸ் 4 செய்தி வெளியிட்டது.

ஒரு குறிப்பிட்ட   தொழில்நுட்பத்தின் மூலம் இந்த தகவல்கள் திருடப்பட்டதாகவும், இதனை டொனால்டு டிரம்ப் அரசியல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றம்சாட்டியது. இந்த செய்தியால், உலகம் முழுவதும் அதிக பயனாளர்களை கொண்ட பேஸ்புக் சர்ச்சையில் சிக்கியது. பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் தவறு நடந்து விட்டதாக ஒப்புக் கொண்டார்.

இந்த நிலையில்  தற்போது பேஸ்புக்கில்  மேலும் 3 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெயர், தொடர்பு விவரங்கள் மற்றும் 1.5 கோடி  நபர்களின்  மற்ற தகவல்களை ஹேக்கர்கள்  திருடியதாக  பேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் மற்றொரு 1.4 கோடி  மக்களுடைய பெயர்கள் மற்றும் தொடர்பு விவரங்கள் திருட  ஹேக்கர்கள் முயற்சித்து உள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு மீறலை தீர்க்க அவர்கள் பணிபுரிந்து வந்தனர்.  இந்த நிலையில்  பேஸ்புக்கில்   சிறிய அளவிலான தாக்குதல்களின் வாய்ப்புகளை அது நிராகரிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி கடிதம்
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வீடியோக்கள் பரவுவதை தடுக்க கோரி சமூக வலைதள நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.
2. பல மணி நேரம் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டகிராம்: பயனாளர்கள் அவதி
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பேஸ்புக் செயலி முடங்கியதாக பயனாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
3. பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?
பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. போலி செய்திகளை எங்களுடைய தளத்தில் அனுமதிக்க மாட்டோம் தேர்தல் ஆணையத்திடம் பேஸ்புக், டுவிட்டர் உறுதி
போலி செய்திகளை எங்களுடைய தளத்தில் அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் ஆணையத்திடம் பேஸ்புக், டுவிட்டர் உறுதியளித்துள்ளது.
5. பயனாளர்கள் கணக்கில் ஹேக்கர்கள் ஊடுருவல்: பேஸ்புக் நிறுவனம் தகவலால் அதிர்ச்சி
சமூக வலதளங்களில் ஜாம்பவானாக திகழும் பேஸ்புக், பயனாளர்கள் 5 கோடி பேரின் கணக்குகளில் ஹேக்கர்கள் ஊடுருவியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.