தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் 50 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு + "||" + Rajasthan: Total 50 people have tested positive for Zika virus in Jaipur district

ராஜஸ்தானில் 50 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

ராஜஸ்தானில் 50 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு
ராஜஸ்தானில் 50 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
ஜெய்பூர், 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜெய்பூர் மாவட்டத்தில் 50 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது  மருத்துவமனை பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள சாஸ்திரி நகரை சேர்ந்தவர்கள். அந்த பகுதியில் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேறகொள்ளப்பட்டுள்ளன. இதேபோன்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 50-ல் இருந்து 170- ஆக உயர்ந்துள்ளது.