தேசிய செய்திகள்

கால்வாய்களை தூர்வார,20 ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை கிரண்பேடி தாக்கு + "||" + No action was taken for 20 years KiranBedi

கால்வாய்களை தூர்வார,20 ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை கிரண்பேடி தாக்கு

கால்வாய்களை தூர்வார,20 ஆண்டுகளாக  எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை கிரண்பேடி தாக்கு
புதுச்சேரியில் உள்ள நீர்நிலைகளுக்ககான பாசன கால்வாய்களை தூர்வார , 20 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரி,

புதுச்சேரி முதலமைச்சரின் குற்றச்சாட்டு தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியதாவது:

புதுச்சேரி ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எந்த பணப்பரிமாற்றமும் செய்யப்படுவதில்லை.  புதுச்சேரியில் உள்ள நீர்நிலைகளுக்ககான பாசன கால்வாய்களை தூர்வார , 20 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் ஆளுநர் மாளிகை பணம் பெறவில்லை; நேரடியாக கொடையாளர்களை ஒப்பந்ததாரர்களிடம் இணைத்து பணிகள் நடத்தப்பட்டது. 

இனிவரும் காலங்களிலும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் நிதி உதவியுடன் நீர் நிலைகள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.