தேசிய செய்திகள்

டெல்லி துவாரகாவில் பட்டபகலில் துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை + "||" + 6 Armed Men Loot Rs. 3 Lakh, Kill Cashier In Delhi Bank. CCTV Captures All

டெல்லி துவாரகாவில் பட்டபகலில் துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை

டெல்லி துவாரகாவில் பட்டபகலில் துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை
டெல்லி துவாரகாவில் பட்டபகலில் துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் வங்கியில் புகுந்து கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் துவாரகாவில் அருகே உள்ள கைரா என்ற கிராமத்தில் காப்ரேஷன் வங்கி உள்ளது. இந்த வங்கியில் நேற்று மாலை முகமுடி அணிந்த 6 பேர் திபு திபு வென வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி காட்டி 3 லட்சம் ரூபாய் கொள்ளையடித்தனர். அவர்களை தடுக்க முயன்ற காசாளரை சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 3 பேர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வங்கியின் பாதுகாவலரிடம் இருந்த துப்பாகிக்கியையும் பறித்துக் கொண்டு அந்த கும்பல் தப்பியோடியது. கொள்ளை சம்பவம் நடந்தபோது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.