தேசிய செய்திகள்

நீதிபதியின் மனைவி, மகன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாவலர் கைது + "||" + The incident took place near Arcadia Market in Sector 49, Gurugram.

நீதிபதியின் மனைவி, மகன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாவலர் கைது

நீதிபதியின் மனைவி, மகன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாவலர் கைது
நீதிபதியின் மனைவி, மகன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குர்கான், 

டெல்லி அருகே உள்ள குர்கான் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு இடத்தில், நீதிபதி ஒருவரின் மனைவி மற்றும் மகன்  மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலரே, இருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குர்கானில் உள்ள ஆர்கடியா மார்க்கெட் அருகே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாவலரின் பெயர் மகிபால் என்பதும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

துப்பாக்கிச்சூடு நடத்திய கையோடு, அருகாமையில் உள்ள சதார் போலீஸ் நிலையத்திற்கு மகிபால் சென்றுள்ளார். போலீசார் பிடிக்க முற்படவே, துப்பாக்கியால் சுட்ட படி, தப்பி ஓடியுள்ளார். சிறிது நேரத்தில், மகிபாலை போலீசார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச்சூடுக்கான பின்னணி காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில், நீதிபதியின் குடும்பத்தினர் , பாதுகாவலர் மகிபாலை மிகவும் மோசமாக நடத்தியதால், ஏற்பட்ட விரக்தியில் துப்பாக்கியால் சுட்டதாக வாக்குமூலம் அளித்தாக ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
ஆண்டிப்பட்டியில் தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி தெரிவித்துள்ளார்.
2. கனடாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி
கனடாவில் தேவாலயம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்.
3. லோக் ஆயுக்தா தலைவராக நீதிபதி தேவதாஸ் நியமனம்
லோக் ஆயுக்தா தலைவராக நீதிபதி தேவதாஸ் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
4. வழக்குகளை தீர்வுகாண பொதுமக்கள் சமரச மையத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் நீதிபதி பேச்சு
வழக்குகளை தீர்வு காண பொதுமக்கள் சமரச மையத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என திருவாரூர் மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி கூறினார்.
5. சமரசம் என்பது நாட்டிற்கும், வீட்டிற்கும் முக்கியமானது மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு
சமரசம் என்பது நாட்டிற்கும் வீட்டிற்கும் முக்கியமானது என்று சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி பேசினார்.