தேசிய செய்திகள்

ரபேல் ஒப்பந்த சர்ச்சை: எச்ஏஎல் நிறுவன ஊழியர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு + "||" + They are insulted and hurt that their hard work and patriotism has been insulted and questioned by the Govt of India: Congress President Rahul Gandhi

ரபேல் ஒப்பந்த சர்ச்சை: எச்ஏஎல் நிறுவன ஊழியர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு

ரபேல் ஒப்பந்த சர்ச்சை: எச்ஏஎல் நிறுவன ஊழியர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு
எச்ஏஎல் நிறுவன ஊழியர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
பெங்களூரு, 

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதில், இந்தியாவில் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தின் கூட்டாளியாக அனில் அம்பானியின் நிறுவனம் சேர்க்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி வருகிறது. 

முந்தைய காங்கிரஸ் அரசு நிர்ணயித்த விலையைக்காட்டிலும் பல மடங்கு விலையை அதிகமாக பாஜக அரசு வழங்க உள்ளது என்றும், மத்திய அரசின் எச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்க இருந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

ஆனால், இதற்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று மத்திய அரசு தரப்பு மறுத்து வருகிறது. அம்பானி நிறுவனத்தை தாங்கள் சுதந்திரமாகவே தேர்வு செய்ததாக டசால்ட் ஏவியேசன் தெரிவித்துள்ளது. இதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

இந்நிலையில் எச்ஏஎல் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி அவர்கள் மத்தியில் பேசியதாவது: , ''எச்ஏஎல் ஒரு நிறுவனம் மட்டுமில்லை. விண்வெளித் துறையில், இந்தியா நுழைய உதவிய பெரும் சொத்து. இந்நிறுவனம் நாட்டுக்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது. இந்தியாவும் சீனாவும் அமெரிக்காவுடன் போட்டியிட முடியும் என்று பாரக் ஒபாமா கூறினால், அதற்குக் காரணம் எச்ஏஎல்தான். 

எச்.ஏ எல் நிறுவனத்துக்கு ரபேல் போர் விமானத்தை கட்டமைக்கும் திறன் இல்லை என்று ஒரு மூத்த நபர் கூறுகிறார். அது இருக்கட்டும், ஆனால், இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ள நபரின் நிலை என்ன? அவர் என்ன தகுதி பெற்று இருக்கிறார்? உங்களின் (எச்ஏஎல்) 78 ஆண்டு கால பணியை நான் பார்த்து இருக்கிறேன். ரபேல் ஒப்பந்தத்தை பெறுவது உங்களின் உரிமைகளில் ஒன்றாகும். ஏனெனில், இந்த விமானத்தை கட்டமைக்கும் அனுபவம் கொண்ட ஒரே நிறுவனம் நீங்கள்தான்” என்றார். 

 செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி

பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது; “ பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்வதில் நாட்டிலேயே, மிகச்சிறந்த திறனும், அனுபவமும் பெற்ற ஒரே நிறுவனம் நாங்கள்தான் என்று அவர்கள் (எச்ஏஎல் ஊழியர்கள்) தெரிவித்தனர். அவர்களின் கடின உழைப்பும் தேசப்பற்றும் இந்திய அரசால் இழிவு படுத்தப்பட்டதாலும், கேள்விக்குள்ளாக்கப்பட்டதாலும், அவர்கள்  அவமானத்திற்குள்ளப்பட்டுள்ளனர்.

 எனவே, எச். ஏ.எல் நிறுவனத்தை சிறுமைப்படுத்தியதற்காக மன்னிப்பு கோர வேண்டும்  என்று அவர்கள் (எச்ஏஎல் ஊழியர்கள்) எதிர்பார்க்கின்றனர். ஆனால், அவர் (நிர்மலா சீதாராமன்) மன்னிப்பு கேட்க மாட்டார் என்று எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. எச்ஏஎல் நிறுவனத்துக்கு போதிய அனுபவம் இல்லை என்று பேசும் நிர்மலா சீதாராமன், அனில் அம்பானி நிறுவனத்தின் அனுபவம் பற்றி எதுவும் பேசவில்லை” என்றார் ராகுல்.


தொடர்புடைய செய்திகள்

1. ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அரசியல் உள்நோக்கம் கொண்டது - காங்கிரஸ்
ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் விடுத்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
2. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களை அவமதித்தாரா? பிரகாஷ் ராஜ் பதில்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களை அவமதித்தார் என்ற பா.ஜனதாவின் குற்றச்சாட்டுக்கு பிரகாஷ் ராஜ் பதிலளித்துள்ளார்.
3. விவசாயிகள் தங்களுடைய பலத்தை பிரதமர் மோடிக்கு சமீபத்திய தேர்தல்களில் காட்டிவிட்டனர் - ராகுல் காந்தி
விவசாயிகள் தங்களுடைய பலம் என்னவென்று பிரதமர் மோடிக்கு சமீபத்திய தேர்தல்களில் காட்டிவிட்டனர் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
4. ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு ராணுவ ஒப்பந்தங்கள் வழங்கும் விவகாரத்தில் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்து உள்ளார்.
5. காதர்கான் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல்
பிரபல பாலிவுட் நடிகர் காதர்கான் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.