மாநில செய்திகள்

நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான ரவுடி பினு கைது + "||" + Rowdy binu arrested by gummidipoondi police

நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான ரவுடி பினு கைது

நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான ரவுடி பினு  கைது
நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான ரவுடி பினு கும்மிடிப்பூண்டியில் கைது செய்யப்பட்டார்.
சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வலம்வந்த பிரபல ரவுடி பினு கடந்த சில வருடங்களாக தலைமறைவாக இருந்துவந்தார். கடந்த பிப்ரவரி மாதம் பினுவின் பிறந்தநாளை கொண்டாட அவரது தம்பி மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் மிகப்பெரிய கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்

இந்த கொண்டாட்டத்தில் நகரத்தின் முக்கிய ரவுடிகள் பலர் பங்கேற்றனர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் அதிரடியாக அப்பகுதிக்கு சென்று ரவுடிகளை கைது செய்தனர். ஆனால் அங்கிருந்து பினு உள்ளிட்ட சிலர் மட்டும் தப்பிச் சென்றார். பின்னர் அவர் தாமாக வந்து சரணடைந்தார்.

இதையடுத்து, கடந்த ஜூன் 23-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் ரவுடி பினுவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி, தினமும் மாங்காடு காவல்நிலையத்தில் கையெழுத்து போட உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், நிபந்தனை ஜாமீனை மீறி மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் ரவுடி பினு தலைமறைவானார். 

இந்த நிலையில், ஏறக்குறைய 4 மாதங்கள் கழித்து, ரவுடி பினுவை காவல் துறை கைது செய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு பகுதியில் பினு கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

1. வானூர் தி.மு.க. பிரமுகரை கொல்ல சதி: வெடிகுண்டுகள் வீசிய ஆசாமிகளை பிடிக்க போலீஸ் தீவிரம்
தி.மு.க. பிரமுகரை கொல்ல வெடிகுண்டுகள் வீசிய மர்ம ஆசாமிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
2. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் கலெக்டர் வீரராகவராவ் தகவல்
மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான வீரராகவராவ் கூறினார்.
3. தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவத்தினர் உள்பட 4 ஆயிரம் போலீசார் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் தகவல்
மாவட்டத்தில் 160 துணை ராணுவத்தினர் உள்பட 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் கூறினார்
4. ஈரோட்டில் போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது
ஈரோடு அருகே போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் அதிகாரி மகன் குத்திக்கொலை எலக்ட்ரீசியன் கைது
சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மகனை குத்தி கொலை செய்த எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.