தேசிய செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 15 நாட்களில் நிவாரணம் வழங்கப்படும்: நவீன் பட்நாயக் + "||" + Odisha CM Naveen Patnaik has announced that affected families of Ganjam, Gajapati&Gunupur sub-division of Rayagada will be given relief for 15 days

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 15 நாட்களில் நிவாரணம் வழங்கப்படும்: நவீன் பட்நாயக்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 15 நாட்களில் நிவாரணம் வழங்கப்படும்: நவீன் பட்நாயக்
ஒடிசாவில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொண்டார்.
புவனேஷ்வர்,

வங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே வியாழக்கிழமை காலை கரையை கடந்தது. இதன் காரணமாக வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஒடிசாவில் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அம்மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலை அடுத்து பெய்த கனமழை காரணமாக ஒடிசாவின் கஞ்சம், கஜாபதி, ராயகாடா உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மூன்று நாட்களாக பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில் ஒடிசா மாநில அரசு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழு, ஒடிசா மாநில சிறப்பு படைப்பிரிவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

கஜபதி மாவட்டம், பராஹரா கிராமத்தில், கனமழையை தொடர்ந்து, நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, குகை ஒன்றில் தங்கியிருந்த 12 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 4 பேரை காணவில்லை. அவர்கள், மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

இந்தநிலையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:

"மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  கஞ்சம், கஜாபதி, ராயகாடா உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 15 நாட்களில் நிவாரணம் வழங்கப்படும்.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஞ்சம் பகுதிகளில் உள்ள 4-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு நிவாரண உதவியாக தலா ரூ. 3000  அரசு சார்பில் வழங்கப்படும்.

நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணி துரிதமாக நடைப்பெற்று வருகிறது. வெள்ளப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்த பின் மத்திய அரசிடம் நிவாரண உதவிக்கோரப்படும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.