தேசிய செய்திகள்

தித்லி புயல் பாதிப்பு: இடைக்கால நிவாரணமாக ஆந்திராவுக்கு ரூ.1,200 கோடி வழங்க வேண்டும் பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் + "||" + Cyclone Titli Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu Urges PM Modi To Allocate Rs 1200 Crores

தித்லி புயல் பாதிப்பு: இடைக்கால நிவாரணமாக ஆந்திராவுக்கு ரூ.1,200 கோடி வழங்க வேண்டும் பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

தித்லி புயல் பாதிப்பு: இடைக்கால நிவாரணமாக ஆந்திராவுக்கு ரூ.1,200 கோடி  வழங்க வேண்டும் பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்
தித்லி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு ரூ.1,200 கோடி இடைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார்.
ஐதராபாத்,

வங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே வியாழக்கிழமை காலை கரையை கடந்தது. இதன் காரணமாக வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்தது. 

பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 8 பேர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு எழுதி உள்ள கடிதத்தில், தித்லி புயலால் ஆந்திராவில் 3 மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட இடங்களில் மாநில அரசு நிவாரணப்பணிகள் மேற்கொண்டு வருகின்றது. சுமார் 2800 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 1200 கோடி வழங்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.