உலக செய்திகள்

துருக்கி: சிறை வைக்கப்பட்ட அமெரிக்க பாதிரியார் விடுதலை + "||" + Turkey: The release of imprisoned American pastor

துருக்கி: சிறை வைக்கப்பட்ட அமெரிக்க பாதிரியார் விடுதலை

துருக்கி: சிறை வைக்கப்பட்ட அமெரிக்க பாதிரியார் விடுதலை
துருக்கியில் சிறை வைக்கப்பட்ட அமெரிக்க பாதிரியார் விடுதலை செய்யப்பட்டார்.
இஜ்மிர்,

அமெரிக்காவை சேர்ந்த பாதிரியார், ஆண்ட்ரூ பரன்சன், துருக்கியில் ஒரு தேவாலயத்தை நடத்தி வந்தார். ஆனால் அவர் அங்கு உள்ள குர்து இன போராளிகள் குழுவுடன் தொடர்புகள் வைத்து இருக்கிறார், உளவு வேலைகளில் ஈடுபடுகிறார் என்று கூறி, துருக்கி அரசு கைது செய்து சிறைக்காவலில் வைத்தது.


அவரை விடுதலை செய்து, அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்புமாறு டிரம்ப் நிர்வாகம் கூறியும், துருக்கி அடிபணிய மறுத்தது. இதனால் இவ்விரு நாடுகள் இடையேயான உறவு பாதித்தது.

இந்த நிலையில் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து துருக்கி கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. அவர் தண்டனைக்காலத்தை ஏற்கனவே கழித்து விட்டதால், அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை கேட்டு அவர் ஆனந்தக்கண்ணீர் சிந்தினார். மனைவி நொரினை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதுதொடர்பாக பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘ இந்த நாளுக்காகத்தான் எனது குடும்பத்தினர் பிரார்த்தனை செய்து வந்தனர். நான் நாடு திரும்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என குறிப்பிட்டார். தனது ஒட்டு மொத்த குடும்பமும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு நன்றி கூறுவதாக தெரிவித்தார்.

விடுதலையைத் தொடர்ந்து அவர் மனைவியுடன் துருக்கியை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் அமெரிக்கா திரும்பினார்.

இதற்கிடையே, சின்சினாட்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப், பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் விடுதலைக்கு மகிழ்ச்சி தெரிவித்தார். ‘‘வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு வந்து அவர் என்னை சந்திப்பார்’’ என்று குறிப்பிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. சிங்கப்பூரில் கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய இந்தியருக்கு சிறை
சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஜெயசீலன் சந்திரசேகர். இவருடைய மனைவி மயூரி கிருஷ்ணகுமார். இவர்களுக்கு கடந்த 2013–ம் ஆண்டு திருமணம் நடந்தது. 3 வயதில் குழந்தை உள்ளது. இதற்கிடையில் மயூரி 2–வது முறையாக கர்ப்பமானார்.
2. உலகைச்சுற்றி...
துருக்கியில் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வி அடைந்தது.
3. துருக்கியில் பத்திரிகையாளர் கசோக்கி படுகொலை: சவுதியில்தான் வழக்கு விசாரணை என அறிவிப்பு
துருக்கியில் பத்திரிகையாளர் கசோக்கி படுகொலை சம்பந்தமான வழக்கு, சவுதியில்தான் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4. துருக்கியில் பத்திரிகையாளர் மாயமான விவகாரம்: சவுதி அரேபிய மாநாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து புறக்கணிக்க முடிவு
துருக்கியில் பத்திரிகையாளர் மாயமான விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சவுதி அரேபிய மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
5. கோவை நரசிம்ம பெருமாள் கோவிலில் ஐம்பொன் சிலைகளை திருடியவருக்கு 5 ஆண்டு சிறை
கோவை நரசிம்ம பெருமாள் கோவிலில் ஐம்பொன் சிலைகளை திருடியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.