உலக செய்திகள்

நேபாளம்: மலையேறும் வீரர்கள் 9 பேர் பனிப்புயல் தாக்கி பலி + "||" + 9 Climbers Dead On Nepal's Mount Gurja After Snowstorm

நேபாளம்: மலையேறும் வீரர்கள் 9 பேர் பனிப்புயல் தாக்கி பலி

நேபாளம்: மலையேறும் வீரர்கள் 9 பேர் பனிப்புயல் தாக்கி பலி
நேபாளத்தில் மலையேறும் வீரர்கள் 9 பேர் பனிப்புயல் தாக்கி பலியாயினர்.
காட்மாண்டு,

நேபாளத்தில் மலைச்சிகரங்களில் ஏறுவதற்காக வெளிநாடுகளில் இருந்து மலையேறும் வீரர்கள் வருவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் அங்கு தென்கொரிய வீரர்கள் 5 பேர் சிகரம் ஏறுவதற்காக வந்திருந்தனர். அவர்கள் நேபாளத்தை சேர்ந்த 4 வழிகாட்டிகளின் உதவியுடன் சிகரம் ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.


அவர்கள் 9 பேரும் தரையில் இருந்து 3 ஆயிரத்து 500 மீட்டர் உயரத்தில், குர்ஜா மலைச்சிகர அடிவாரத்தில் முகாமிட்டிருந்தனர். இந்த நிலையில் அங்கு திடீரென கடும் பனிப்புயல் வீசியது. இதில் அவர்கள் தங்கி இருந்த கூடாரம் முற்றிலும் அழிந்து விட்டது. இதில் 9 பேரும் உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஒரு ஹெலிகாப்டர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அந்த ஹெலிகாப்டர், பனிப்புயல் தாக்கி 8 பேர் உயிரிழந்து, உடல்கள் கிடப்பதைக் கண்டு உறுதி செய்தது. 9-வது வீரரின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.

பலியானவர்களில் தென்கொரிய வீரர்கள் அடங்கிய குழுவுக்கு தலைமை தாங்கிய கிம் சாங் ஹோவும் ஒருவர். இவர் மலையேறுவதில் சாதனையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பலியானவர்களின் உடல்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. நேபாளத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மந்திரி உள்பட 7 பேர் சாவு
நேபாள விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்தவர் ரபிந்திர அதிகாரி (வயது 39).
2. நேபாளத்தில் சோகம் : வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் 2 மகன்களுடன் சாவு
நேபாளத்தில் வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பெண், 2 மகன்களுடன் உயிரிழந்தார்.
3. நேபாளத்தில் நிலநடுக்கம்
நேபாளத்தில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. நேபாளம்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 23 பேர் பலி
நேபாளத்தில் பள்ளத்தாக்கில் விழுந்து பேருந்து விபத்துக்குள்ளானதில், மாணவர்கள் உட்பட 23 பேர் பலியாகினர்.
5. நேபாளம்: மாணவர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து - 16 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் கல்வி சுற்றுலா சென்ற மாணவர்களின் பஸ் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.