தேசிய செய்திகள்

காஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி பலி + "||" + Kashmir: A terrorist killed in a gun battle with security forces

காஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி பலி

காஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி பலி
காஷ்மீரில், பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் பலியானார்.
ஸ்ரீநகர்,

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட பாப்கந்த் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு மறைந்திருந்த பயங்கரவாதி ஒருவர் இன்று அதிகாலையில் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.


இதனால் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை மூண்டது. இறுதியில் அந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த சபிர் அகமது தார் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து சில ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

முன்னதாக, பாரமுல்லா மாவட்டத்துக்கு உட்பட்ட வார்போராவில் வசித்து வந்த ஜாவித் அகமது லோன் என்ற போலீஸ்காரரின் வீட்டில் நேற்று இரவு சில பயங்கரவாதிகள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் அந்த போலீஸ்காரரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடினர்.

இதில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜாவித் அகமது லோன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் கடும் குளிர்
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் வாட்டி வருகிறது.
2. காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பொதுமக்கள் 7 பேர் பலியானதால் பதற்றம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது, பொதுமக்கள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
3. காஷ்மீர்: பயங்கரவாதிகளால் 4 போலீசார் சுட்டுக்கொலை
காஷ்மீரில், பயங்கரவாதிகளால் 4 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
காஷ்மீரில் உள்ள பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த கோர விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
5. காஷ்மீர்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து 11 பேர் பலி
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகினர்.