தேசிய செய்திகள்

மதுரை அருகே குருவித்துறை பெருமாள் கோவிலில் 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளை + "||" + 4 panchaloka idols stolen from temple

மதுரை அருகே குருவித்துறை பெருமாள் கோவிலில் 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளை

மதுரை அருகே குருவித்துறை பெருமாள் கோவிலில் 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளை
மதுரை அருகே குருவித்துறை பெருமாள் கோவலில் 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

சோழவந்தான், 


 சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் வைகை கரையோரம் சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் உள்ளது. நேற்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் சிறப்பு பூஜைகள் முடிந்து மாலை அர்ச்சகர்கள் கோவிலை பூட்டி சென்றுவிட்டனர். நள்ளிரவு 12½ மணியளவில் மின் வயர்கள் உரசி தீப்பிடித்ததால் கோவிலில் உள்ள அபாய மணி ஒலித்தது. இதைக் கேட்ட காவலாளிகள் ராஜகோபுர அவசர வழியாக கோவிலின் உள்ளே சென்று சுற்றி பார்த்தனர். 

வயரில் குரங்குகள் அல்லது பறவைகள் உரசியதால் தீப்பிடித்திருக்கலாம் என நினைத்து அபாய ஒலி சத்தத்தை நிறுத்திவிட்டு வந்து விட்டனர். அதிகாலை கோவில் ஊழியர் மணிகண்டன் கோவிலின் வடக்கு பகுதிக்கு சென்றபோது அங்குள்ள சுவரில் வேட்டியால் கயிறுபோல் கட்டி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி கோவில் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்படட்து. பின்னர் கோவில் வாசல் கதவை திறந்து உள்ளே சென்றபோது அங்கிருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச பெருமாள் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் செயல் அலுவலர் காடுபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் துப்பறியும் நாய், கைரேகை நிபுணர்கள், தடயஅறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து தனிப்படை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவிலில் கொள்ளை போன சிலைகளின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என தெரிகிறது. இந்த கோவிலில் 1971–ம் ஆண்டு 2 ஐம்பொன் சிலைகள் திருட்டுபோனது. பின்னர் அது கண்டுபிடிக்கப்பட்டு சிலைகள் மீட்கப்பட்டன. இச்சம்பவம் இப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்
மதுரையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவரை கொன்று, ஒரு கும்பல் அவரது தலையை துண்டித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
2. மதுரையில் பிளாட்பாரத்துக்கு கொண்டு வந்த போது செங்கோட்டை ரெயில் பெட்டி தடம் புரண்டது
மதுரையில் பிளாட் பாரத்துக்கு கொண்டு வந்த போது செங்கோட்டை ரெயிலின் ஒரு பெட்டி தடம்புரண்டது. இதனால் அந்த ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
3. மதுரை-கன்னியாகுமரி இடையிலான நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.27 லட்சம் லஞ்சம் - நெடுஞ்சாலை வாரிய பொதுமேலாளர் உள்பட 4 பேர் கைது
மதுரை-கன்னியாகுமரி இடையிலான நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.27 லட்சம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக, நெடுஞ்சாலை வாரிய பொதுமேலாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. மதுரை: வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறையில் மர்ம நபர் நுழைந்ததாக புகார் - பரபரப்பு
மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறையில் மர்ம நபர் நுழைந்து நகல் எடுத்ததாக எழுந்த புகாரால் பரபரப்பு நிலவி வருகிறது.
5. உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருத்தேரோட்டம் தொடங்கியது
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருத்தேரோட்டம் தொடங்கியது

ஆசிரியரின் தேர்வுகள்...