தேசிய செய்திகள்

கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த டெல்லி வாசிகள் ! காற்று மாசு அபாய அளவை எட்டியது + "||" + Delhi Plunges Into Thick Smog As Many Skirt Diwali Cracker Curbs

கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த டெல்லி வாசிகள் ! காற்று மாசு அபாய அளவை எட்டியது

கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த டெல்லி வாசிகள் ! காற்று மாசு அபாய அளவை எட்டியது
கட்டுப்பாட்டை டெல்லி மக்கள் நேற்று இரவு நீண்ட நேரம் பட்டாசு வெடித்ததால், காற்று மாசின் அளவு அபாய கட்டத்தை எட்டியது.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லி, கடுமையான காற்று மாசால் அவதிப்பட்டு வருகிறது. காற்று மாசை கட்டுக்குள் கொண்டு வர டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே, தீபாவளி பண்டிகைக்கு  இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை மக்கள் மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மீறி மக்கள் பட்டாசு வெடித்தால், காவல்துறை அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  ஆனால், நேற்று உச்ச நீதிமன்ற தடையை மீறியும் டெல்லியில் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்து தள்ளப்பட்டன. இதனால், காற்று மாசு மிகவும் அபாய அளவை எட்டியது. 

இரவு 7 மணி முதல் காற்று மாசின் அளவு மிகவும் மோசமாக சென்றது. 7 மணியளவில் காற்று மாசின் அளவு 281 என்ற அளவில் இருந்தது. 11 மணியளவில் 302 ஆக அதிகரித்தது. இதனால், இரவு எங்கு பார்த்தாலும் புகை படலமாக காட்சி அளித்தது. இதனால், மக்கள் கடும் அவதி அடைந்தனர்.  டெல்லியில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதை ஒப்புக்கொண்ட போலீசார், உத்தரவை மீறியவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை அணி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய சென்னை அணி 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. #DCvsCSK
2. டெல்லி உள்பட 5 மாநிலங்களில் தாக்குதல் நடத்த உள்ளதாக ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் மிரட்டல்
டெல்லி உள்பட 5 மாநிலங்களில் தாக்குதல் நடத்த உள்ளதாக ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்து உள்ளனர்.
3. டெல்லியில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி
டெல்லியில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், தனக்கு ரூ.147 கோடி மதிப்புடைய சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
4. ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை: டெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு - ஷீலா தீட்சித், அஜய் மக்கானுக்கு வாய்ப்பு
டெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. அதில் ஷீலா தீட்சித், அஜய் மக்கானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
5. டெல்லியில் உள்ள 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
டெல்லியில் உள்ள 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.