உலக செய்திகள்

இஸ்ரேலிய ஸ்பைவேரால் கண்காணிக்கப்பட்டு சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை - எட்வர்டு ஸ்னோடன் + "||" + Snowden: Israeli Firm's Spyware Was Used to Track Khashoggi

இஸ்ரேலிய ஸ்பைவேரால் கண்காணிக்கப்பட்டு சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை - எட்வர்டு ஸ்னோடன்

இஸ்ரேலிய  ஸ்பைவேரால் கண்காணிக்கப்பட்டு சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை - எட்வர்டு ஸ்னோடன்
சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியை இஸ்ரேலிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஸ்பைவேர் கொலை செய்ய பயன்படுத்தப்பட்டது என எட்வர்டு ஸ்னோடன் கூறி உள்ளார்.
டெல் அவீவ்,

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர் அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர் மாயமானார்.

அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வந்தது.

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார்.

இது ஒரு சர்வதேச கண்டனத்தைத் ஏற்படுத்தியதுடன்  மேற்கு நாடுகளுடனான உறவுகளுக்கு சவுதி அரேபியாவுக்கு நெருக்கடி அளித்து உள்ளது.

இந்த நிலையில்  முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த எட்வர்டு ஸ்னோடன் இஸ்ரேல்  நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மென்பொருள்  ஒன்றால் பத்திரிகையாளர் ஜமால் கண்காணிக்கப்பட்டார். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி உள்ளார்.

ஒரு புகலிடக் கோரிக்கையின் கீழ் மாஸ்கோவில் வசிக்கும் ஸ்னோடன்  செவ்வாயன்று வீடியோ மூலம் டெல் அவீவில் நடைபெற்ற  மாநாட்டில் பேசினார். 

உலகெங்கிலும் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் உரிமை ஆர்வலர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு டிஜிட்டல் கருவியை என்எஸ்ஓ விற்பனை செய்ததாக ஸ்னோவ்டென் கூறினார்.

சவுதி பத்திரிகையாளர் இஸ்ரேலிய ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டு கொலை செய்யபட்டதாக  கனடியன் ஆராய்ச்சி நிறுவனம் சிட்டிசன் ஆய்வகத்தால் கடந்த அக்டோபரில் முதன்முதலாக தகவல் வெளியிடப்பட்டது.

என்எஸ்ஓ  பெகாசஸ் ஸ்பைவேர் மற்றொரு  சவுதி அரேபியரும், கசோக்கியின் நண்பருமான ஓமர் அப்துலாசின் தொலைபேசியில் பொருத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜமால் கசோக்கி கொலை: சவுதியை சேர்ந்த 16 பேருக்கு அமெரிக்கா தடை
பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கொலையில் தொடர்புடையவர்கள் எனக்கூறி சவுதியை சேர்ந்த 16 பேர், நாட்டுக்குள் வர அமெரிக்கா தடை விதித்துள்ளது.