தேசிய செய்திகள்

ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்: மும்பை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிப்பு + "||" + Flights Delayed In Mumbai After Strike By Air India Contract Ground Staff

ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்: மும்பை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிப்பு

ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்: மும்பை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிப்பு
ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் காரணமாக மும்பை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மும்பை,

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் ஒரு பிரிவினர் நேற்று இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு மற்றும் வருகை தரும் விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. விமான போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் விமான பயணிகள் சிலர் தங்கள் அசவுகர்யத்தை வெளியிட்டனர். 

ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் இது பற்றி கூறும் போது, “ நிலமையை மதிப்பிட்டு வருவதாகவும், விமான போக்குவரத்து இடையூறை சரி செய்யும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. 2019-20-ஆம் நிதி ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க நடவடிக்கை மத்திய அரசு அதிகாரி தகவல்
எதிர்வரும் 2019-20-ஆம் நிதி ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
2. ‘‘ஏர் இந்தியாவுக்கு புத்துயிரூட்டும் திட்டம் தயார்’’ மத்திய அரசு அறிவிப்பு
பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, ரூ.55 ஆயிரம் கோடி கடனில் சிக்கி தவித்து வருகிறது.
3. ஸ்டாக்கோம் விமான நிலைய கட்டிடத்தில் ஏர் இந்தியா விமானம் மோதியது
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கோம் விமான நிலைய கட்டிடத்தில் டெல்லி ஏர் இந்தியா விமானம் மோதியது.
4. போதையில் இருந்த ஏர் இந்தியா விமானியின் உரிமம் 3 ஆண்டுகள் ரத்து
போதையில் இருந்த ஏர் இந்தியா விமானியின் உரிமம் 3 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
5. மும்பை விமான நிலையத்தில் விமானத்தின் கதவை மூடச்சென்ற பணிப்பெண் கீழே விழுந்தார், மருத்துவமனையில் அனுமதி
மும்பை விமான நிலையத்தில் ஏர்இந்தியா விமானத்தின் கதவை மூடச்சென்ற பணிப்பெண் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.