சினிமா செய்திகள்

சர்கார் பட விவகாரம் : இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது போலீசில் புகார் + "||" + Sargar's film issue: Director AR On Murugadoss Complain to police

சர்கார் பட விவகாரம் : இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது போலீசில் புகார்

சர்கார் பட விவகாரம் :  இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது போலீசில் புகார்
சர்கார் பட விவகாரம் தொடர்பாக அந்த படத்தின் இயக்குனர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளையும் மீறி தீபாவளியன்று வெளியானது.

முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்வது போன்ற காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தனிமனித ஓட்டுரிமையின் அவசியத்தையும், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் செயல்பாடுகள் குறித்தும், அரசின் இலவச திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளன.

தமிழக அரசியல் குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள் இருப்பதாக கூறி அதிமுகவை சேர்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  சர்கார் பட விவகாரம் தொடர்பாக அந்த படத்தின் இயக்குனர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேவராஜன் என்பவர்  புகார் அளித்து உள்ளார்.

இலவசங்களை பெறும் மக்களை இழிவுபடுத்தும் வகையிலும், அரசாங்கத்திற்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையிலும் சர்கார் படம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுமா என்பதில் குழப்பம்
எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுமா என்பதில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
2. எல்லா மொழிகளிலும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் நடிக்க ஆசை - ராதிகா ஆப்தே
எல்லா மொழிகளிலும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் நடிக்க ஆசைப்படுகிறேன் என நடிகை ராதிகா ஆப்தே கூறி உள்ளார்.
3. பாதுகாப்பு கேட்டு சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகர் விஷால் மனு
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகர் விஷால் மனு கொடுத்தார்.
4. பெண்ணிடம் தகாத முறையில் பேசிய கேரள நடிகர் மீது வழக்குப் பதிவு
கேரளாவை சேர்ந்த நடிகர் வினாயகன், தலித் பெண் சமூக செயற்பாட்டாளரிடம் செல்போனில் தகாத முறையில் பேசியதாக கூறி 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
5. பாகிஸ்தான் வீடியோவுக்கு எதிராக வீடியோ -சர்ச்சையை கிளப்பிய நடிகை பூனம் பாண்டே
பாகிஸ்தான் வீடியோவுக்கு எதிராக வீடியோ பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார் நடிகை பூனம் பாண்டே.