உலக செய்திகள்

ஆசியா பிபி வெளிநாடு சென்றதாக வெளியான செய்தி பொய்யானது - பாகிஸ்தான் + "||" + Reports of Aasia Bibi leaving Pakistan fake news FO

ஆசியா பிபி வெளிநாடு சென்றதாக வெளியான செய்தி பொய்யானது - பாகிஸ்தான்

ஆசியா பிபி வெளிநாடு சென்றதாக வெளியான செய்தி பொய்யானது - பாகிஸ்தான்
தெய்வ நிந்தனை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசியா பிபி வெளிநாடு சென்றதாக வெளியான செய்தி பொய்யானது என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் ஆசியா பிபி என்ற கிறிஸ்தவப் பெண்ணுக்கு தெய்வ நிந்தனை வழக்கில் விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதை லாகூர் ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதை எதிர்த்து அவர் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் அமர்வு, அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக பாகிஸ்தானில் மதவாத அமைப்புகளும், கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன.

இந்நிலையில் மால்டான் சிறையிலிருந்து ஆசியா பிபி விடுதலை செய்யப்பட்டார். ராவல்பிண்டியில் உள்ள விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் நெதர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என செய்திகள் வெளியாகியது. பாகிஸ்தான் மீடியாக்கள் அனைத்தும் இச்செய்தியை ஒளிபரப்பு செய்தனர். இப்போது இச்செய்தியை பாகிஸ்தான் அரசு போலியானது என்று மறுத்துள்ளது. “ஆசியா பிபி பாகிஸ்தானை விட்டு வெளியேறி விட்டார் என்பதில் துளியும் உண்மையில்லை, இது முற்றிலும் பொய்யான செய்தியாகும்” என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தான் ஊடங்களை சாடியுள்ள தகவல்தொடர்புத் துறை அமைச்சர் பாவத் சவுதாரி, தலைப்புச் செய்திகளுக்காக போலியான செய்திகளை வெளியிடுவது மீடியாக்களின் இன்றைய விதியாகி விட்டது. ஆசியா பிபி மிகவும் முக்கியமானது விஷயமாகும், செய்தியை வெளியிடுவது மிகவும் பொறுப்புமிக்கது. உறுதியில்லாமல் ஆசியா பிபி வெளியேறினார் என செய்தி வெளியிடுவது பொறுப்பற்ற செயலாகும். மீடியாக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. இம்ரான்கான் உதவியாளர் நியமனத்தில் சர்ச்சை : பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்கிறது
பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கான் தனது சிறப்பு உதவியாளராக ஜூல்பிகார் உசேன் புகாரி என்பவரை நியமனம் செய்தார்.
2. தலையை தாக்கிய பவுன்சரால் நிலைகுலைந்த இமாம் உல் ஹக்
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், பேட்டிங் செய்யும் போது பவுன்சர் பந்து தாக்கியதில், பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் காயம் அடைந்தார்.
3. ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பல் ரோந்து பணி குறித்து பாக்.கவலை: இந்தியா பதிலடி
ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பல் ரோந்து பணி குறித்து கவலை தெரிவித்த பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
4. பாகிஸ்தானில் மத நிந்தனை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசியா பிபி சிறையில் இருந்து விடுதலை
பாகிஸ்தானில் மத நிந்தனை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசியா பிபி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
5. பாக்.கிற்கு வழங்கப்படும் நிதி உதவியின் விபரங்களை வெளியிட சீனா மீண்டும் மறுப்பு
பாகிஸ்தானுக்கு வழங்க தயாராக இருக்கும் நிதி உதவியின் விவரங்களை வெளியிட சீனா மீண்டும் மறுத்துள்ளது.