தேசிய செய்திகள்

சர்கார் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டம் + "||" + Workers of AIADMK protest outside Kasi theatre against Sarkar film

சர்கார் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டம்

சர்கார் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டம்
சர்கார் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,


நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியிடுவதற்கு முன்னர் கதை தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்கள் எழுந்தது. படத்தில் முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது மற்றும்  படத்தின் வில்லி பாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் இயற் பெயரை சூட்டியது அதிமுகவினரை கோபம் அடைய செய்துள்ளது. அதிமுக அமைச்சர் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். 

இதற்கிடையே தியேட்டர்களில் அவர்கள் தங்களுடைய போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர். மதுரையில் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் ‘சர்கார்’ படம் ஓடிய அண்ணாநகர் சினிப்ரியா காம்ப்ளக்ஸ் தியேட்டர் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் விஜய்யை கைது செய்ய வேண்டும், சர்காரில் உள்ள சர்ச்சைக்குரிய கருத்துகளையும், காட்சிகளையும் நீக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனால் தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது. கோவையிலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. போராட்டம் காரணமாக சில இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

இந்நிலையில் சர்கார் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்தால் கிண்டி-கோயம்பேடு சாலையில் ஜாபர்கான்பேட்டையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் ஒப்பந்தம்; ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? தம்பிதுரை கேள்வி ராகுல் காந்தி வரவேற்பு
ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிபன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? என்ற தம்பிதுரையின் கேள்வியை காங்கிரஸ் தலைவர் ராகுல் வரவேற்றார்.
2. ‘முத்தலாக்’ மசோதா வாக்கெடுப்பு காங்கிரஸ், அதிமுக வெளிநடப்பு
‘முத்தலாக்’ மசோதா வாக்கெடுப்புக்கு முன்னதாக காங்கிரஸ் மற்றும் அதிமுக மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தது.
3. சர்ச்சைகளுக்கு மத்தியில், ‘சர்கார்!’
விஜய் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில், தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம், ‘சர்கார்.’
4. புகைப்பிடிக்கும் காட்சி : கேரளாவில் விஜய் மீது வழக்கு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்ச்சைகளில் சிக்கியது.
5. ”சர்கார்” வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்
”சர்கார்” வெற்றியைக் கேக் வெட்டி நடிகர் விஜய் உட்பட படக்குழுவினர் கொண்டாடிய படம் வைரலாகி வருகிறது.