மாநில செய்திகள்

சர்கார் விவகாரம்: விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு தடம் புரளும் - கமல்ஹாசன் தாக்கு + "||" + Kamal Haasan slams Tamil Nadu govt over Sarkar Issue

சர்கார் விவகாரம்: விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு தடம் புரளும் - கமல்ஹாசன் தாக்கு

சர்கார் விவகாரம்: விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு தடம் புரளும் - கமல்ஹாசன் தாக்கு
சர்கார் பட விவகாரத்தில் அரசை விமர்சனம் செய்துள்ள கமல்ஹாசன், விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு தடம் புரளும் என்று கூறியுள்ளார்.


சென்னை,


விஜயின் ‘சர்கார்’  படத்தில் தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது மற்றும் படத்தின் வில்லி பாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் இயற் பெயரை சூட்டியது அதிமுகவினரை கோபம் அடைய செய்துள்ளது. அதிமுகவினர் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். திரையரங்குகளில் போராட்டம் நடத்தியவர்கள் பேனர்களை கிழித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டம் காரணமாக திரையரங்குகளில் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

போராட்டம் தொடர்ந்த நிலையில் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவங்களுக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார்  படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை  ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள்  கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும் என குறிப்பிட்டுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம் -கமல்ஹாசன்
ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
2. பிளாஸ்டிக் ஒழிப்பை அமல்படுத்துவதற்கு கால அவகாசம் - விக்கிரமராஜா வேண்டுகோள்
பிளாஸ்டிக் ஒழிப்பை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு கால அவகாசம் வழங்க வேண்டும் என விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு
பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதியில் இருந்து தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
4. இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசன் ஜோடி?
தமிழ் பட உலகின் `நம்பர்-1' நாயகி நயன்தாரா ஏறக்குறைய எல்லா பிரபல கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார். கமல்ஹாசனுடன் மட்டும் அவர் இதுவரை ஜோடி சேரவில்லை.
5. மக்கள் நீதி மய்யம், தமிழக மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும்போது நான் துணை நிற்பேன் - இயக்குநர் அமீர்
மக்கள் நீதி மய்யம் தமிழக மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும்போது நான் துணை நிற்பேன் என இயக்குநர் அமீர் கூறி உள்ளார். #MakkalNeedhiMaiam