தேசிய செய்திகள்

பிரதமர் மோடி போன்ற தோற்றம் கொண்டவர் சத்தீஷ்காரில் காங்கிரசுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம்! + "||" + PM Modi s lookalike switches over to Congress

பிரதமர் மோடி போன்ற தோற்றம் கொண்டவர் சத்தீஷ்காரில் காங்கிரசுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம்!

பிரதமர் மோடி போன்ற தோற்றம் கொண்டவர் சத்தீஷ்காரில் காங்கிரசுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம்!
பிரதமர் மோடி போன்ற தோற்றம் கொண்டவர் சத்தீஷ்காரில் காங்கிரசுக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

ராய்பூர்,

 
சட்டசபை தேர்தல் நடக்க உள்ள சத்தீஷ்கார் மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. எதிர்க்கட்சியான காங்கிரஸ் பிரதமர் மோடி போன்று தோற்றம் கொண்ட அபினாந்த் பதாக் பிரசாரம் செய்ய களம் இறக்கியுள்ளது. நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த பாஸ்தர், தண்டேவாடா, ஜாக்தால்பூர் மற்றும் கோன்காடாகான் பகுதிகளில் தீவிரமாக காங்கிரசுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். பிரதமர் மோடியை போன்ற தோற்றம் கொண்டவர் அவரைப்போன்றே மித்ரா என்றழைத்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய், வளர்ச்சிக்காக காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என பிரசாரம் மேற்கொள்கிறார். அபினாந்த் பதாக் பா.ஜனதாவில் இருந்தவர். கடந்த மாதம் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். இப்போது அவரை தீவிர பிரசாரத்தில் காங்கிரஸ் இறக்கியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கானா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் மீது ஒவைசி திடுக்கிடும் புகார்
தெலுங்கானா சட்டசபை தேர்தலில், ‘எனது கூட்டத்தை ரத்து செய்ய பேரம் பேசினர்’ என காங்கிரஸ் மீது ஒவைசி திடுக்கிடும் புகார் தெரிவித்தார்.
2. காங்கிரஸ் கட்சியின் ஒரு வேட்பாளரை கூட தேர்வு செய்யாதீர்கள்; பிரதமர் மோடி வேண்டுகோள்
காங்கிரஸ் கட்சியின் ஒரு வேட்பாளரை கூட தேர்வு செய்யாதீர்கள் என வாக்காளர்களிடம் பிரதமர் மோடி இன்று கேட்டு கொண்டுள்ளார்.
3. ஆர்.எஸ்.எஸ். ஆள்சேர்க்க உதவுகிறீர்கள்! பினராயி விஜயன் அரசு மீது காங்கிரஸ் பாய்ச்சல்
சபரிமலை சன்னிதானம் பகுதியில் அய்யப்ப பக்தர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் கேரள அரசை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.
4. இந்திரா காந்தி பிறந்த தினம்: நினைவிடத்தில் சோனியா காந்தி , ராகுல் உள்ளிட்டோர் மரியாதை
இந்திரா காந்தியின் பிறந்த தினமான இன்று அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி , ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
5. டெல்லியில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
டெல்லியில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.