தேசிய செய்திகள்

டெல்லி: ஊழல் கண்காணிப்பு அதிகாரியுடன் சி.பி.ஐ. இயக்குனர் சந்திப்பு + "||" + Delhi: CBI to deal with corruption watchdog Director Meeting

டெல்லி: ஊழல் கண்காணிப்பு அதிகாரியுடன் சி.பி.ஐ. இயக்குனர் சந்திப்பு

டெல்லி: ஊழல் கண்காணிப்பு அதிகாரியுடன் சி.பி.ஐ. இயக்குனர் சந்திப்பு
டெல்லியில் உள்ள ஊழல் கண்காணிப்பு அதிகாரியை, சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா இன்று சந்தித்தார்.
புதுடெல்லி,


மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இதனால் அவர்களை பொறுப்பில் இருந்து விடுவித்து இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது.


இந்த ஊழல் புகார்களை மத்திய ஊழல் கண்காணிப்பு கமி‌ஷனர் விசாரித்து வருகிறார். இந்த விசாரணையை 2 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என கடந்த 26-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா டெல்லியில் மத்திய ஊழல் கண்காணிப்பு கமி‌ஷனர் கே.வி.சவுத்ரியை இன்று சந்தித்தார். அப்போது தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். மேலும் ஊழல் கண்காணிப்பு கமி‌ஷனர் சரத் குமார் மற்றும் அதிகாரிகளையும் அவர் சந்தித்தார்.

இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைப்போல அஸ்தானாவும் மத்திய ஊழல் கண்காணிப்பு கமி‌ஷனரை சந்தித்து பேசியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி
பா.ஜனதா தலைவர் அமித்ஷா உடல் நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #AmithShah #AIIMS
2. டெல்லியில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசனை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பங்கேற்பு
டெல்லியில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் கமிஷன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பங்கேற்றார்.
3. டெல்லியில் கடும் பனிமூட்டம்: ரயில்கள், விமானங்கள் தாமதம்
டெல்லியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக ரயில்கள், விமானங்கள் தாமதம் ஆனது.
4. டெல்லி தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்ததில் 9 பேர் சாவு
டெல்லி தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்ததில் 9 பேர் பலியாயினர்.
5. டெல்லி புத்தாண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
டெல்லியில் புத்தாண்டு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்து கொண்டாட்டப்பட்டது.