தேசிய செய்திகள்

நிரவ் மோடியை ‘தலைமறைவு குற்றவாளி’ என குஜராத் கோர்ட்டு அறிவிப்பு + "||" + Gujarat court declares Narendra Modi as 'absconding Culprit'

நிரவ் மோடியை ‘தலைமறைவு குற்றவாளி’ என குஜராத் கோர்ட்டு அறிவிப்பு

நிரவ் மோடியை ‘தலைமறைவு குற்றவாளி’  என குஜராத் கோர்ட்டு அறிவிப்பு
ரூ.52 கோடி சுங்க வரி ஏய்ப்பு வழக்கில், வைர வியாபாரி நிரவ் மோடியை தலைமறைவு குற்றவாளி என குஜராத் கோர்ட்டு அறிவித்தது.
சூரத்,

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, ரூ.13 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் சிக்கி வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். 2014-ம் ஆண்டு அவர் ரூ.52 கோடி அளவுக்கு சுங்க வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக சுங்க வரி துணை ஆணையர் ஆர்.கே.திவாரி தொடர்ந்த வழக்கு, குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.


இந்த வழக்கில், நிரவ் மோடி ஆஜராகாததால், அவருக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகும் அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து, அவரை தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்குமாறு கோர்ட்டை சுங்க இலாகா அணுகியது. இந்த மனு, மாஜிஸ்திரேட்டு பி.எச்.கபாடியா முன்பு  இன்று விசாரணைக்கு வந்தது. நிரவ் மோடியை குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 82-வது பிரிவின்கீழ், ‘தலைமறைவு குற்றவாளி’ என்று மாஜிஸ்திரேட்டு அறிவித்தார். 15-ந் தேதி, அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.