தேசிய செய்திகள்

‘மோடி அரசு ரிசர்வ் வங்கியை கைப்பற்ற முயற்சிக்கிறது’ - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு + "||" + 'Modi's government seeks to seize RBI' - P Chidambaram's allegation

‘மோடி அரசு ரிசர்வ் வங்கியை கைப்பற்ற முயற்சிக்கிறது’ - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

‘மோடி அரசு ரிசர்வ் வங்கியை கைப்பற்ற முயற்சிக்கிறது’ - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
ரிசர்வ் வங்கியை கைப்பற்ற மோடி அரசு முயற்சி செய்வதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,


நிதி பற்றாக்குறையில் சிக்கி தவிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ரிசர்வ் வங்கியை கைப்பற்ற முயற்சிப்பதாகவும், இந்த நடவடிக்கை பேரழிவை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.


கொல்கத்தாவில் இன்று நிருபர்களிடம் பேசுகையில், மேற்கண்டவாறு கூறிய அவர், ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி நிதி கேட்டு இருக்கிறது என்று தெரிவித்ததோடு, அந்த வங்கியின் போர்டு வருகிற 19-ந் தேதி கூட இருக்கிறது என்றும், அதில் குறிப்பிட்ட சிலரை மத்திய அரசு நியமித்து இருப்பதாகவும் குறை கூறினார்.

மத்திய அரசின் கோரிக்கையை ரிசர்வ் வங்கி நிராகரித்தாலும் அல்லது ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்தாலும் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் அப்போது ப.சிதம்பரம் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் முடிவுக்கு பின்னர் ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவதில் சந்தேகம் இல்லை ப.சிதம்பரம் பேச்சு
தேர்தல் முடிவுக்கு பின்னர் ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவதில் சந்தேகம் இல்லை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.
2. மோடி அரசு விலைவாசியை கட்டுக்குள் வைத்தது -ராஜ்நாத் சிங்
சிறந்த நிதி நிர்வாகத்தின் மூலம் மோடி அரசு விலைவாசியை கட்டுக்குள் வைத்தது என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
3. பா.ஜனதா ஆட்சியில் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளோம் - ப.சிதம்பரம் பேச்சு
பா.ஜனதா ஆட்சியில் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளோம் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.
4. காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் விவசாய கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் - ப.சிதம்பரம் பேச்சு
காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் விவசாய கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று ப.சிதம்பரம் கூறினார்.
5. ரிசர்வ் வங்கி பிப். 12-ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
ரிசர்வ் வங்கி கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.