மாநில செய்திகள்

சர்கார் பட விவகாரம்: ரஜினிகாந்த் டுவிட்டரில் கண்டனம் + "||" + Sarkar's film affair: Rajinikanth denounced on Twitter

சர்கார் பட விவகாரம்: ரஜினிகாந்த் டுவிட்டரில் கண்டனம்

சர்கார் பட விவகாரம்: ரஜினிகாந்த் டுவிட்டரில் கண்டனம்
சர்கார் பட விவகாரம் தொடர்பாக, ரஜினிகாந்த் டுவிட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சென்னை,

நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியிடுவதற்கு முன்னர் கதை தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்கள் எழுந்தது.

ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக கருத்துக்களும் காட்சிகளும் இடம் பெற்று இருப்பதாகவும், அதனை உடனடியாக நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். மேலும் அதிமுக அமைச்சர்கள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.


மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சர்கார் திரைப்படத்தின் பேனர்களையும், கட் அவுட்டுகளையும் சேதப்படுத்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சர்கார் பட விவகாரம் தொடர்பாக, ரஜினிகாந்த் தனது டுவிட்டரில். ‘தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இளையராஜா விழாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்கள்
இளையராஜா விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
2. அமெரிக்காவில் ஓய்வை முடித்து ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்
அமெரிக்காவில் ஓய்வை முடித்து, நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்ப உள்ளார்.
3. ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது எப்போது?
‘நான் எப்போது வருவேன்? எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்டாக வருவேன்’ என்று ஒரு திரைப்படத்தில் ரஜினிகாந்த் கூறுவார். அது அவரது அரசியல் பிரவேசத்துக்கும் சரியாக பொருந்தும்.
4. ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் டிரெய்லர் 28-ந்தேதி வெளியீடு
ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் டிரெய்லர் 28-ந்தேதி வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. தி.மு.க. ஓட்டுகளை ரஜினிகாந்த், கமல்ஹாசன் பிரிப்பார்கள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
ரஜினிகாந்த், கமல்ஹாசன் தி.மு.க. ஓட்டுகளை பிரிப்பார்கள். அ.தி.மு.க. ஓட்டு வங்கியை தொட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.