தேசிய செய்திகள்

மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்கத்துக்கான நோக்கம் நிறைவேறவில்லை - ரிசர்வ் வங்கி அம்பலம் + "||" + The purpose of removal of the monetary policy by the central government has not been fulfilled - the Reserve Bank's exposure

மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்கத்துக்கான நோக்கம் நிறைவேறவில்லை - ரிசர்வ் வங்கி அம்பலம்

மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்கத்துக்கான நோக்கம் நிறைவேறவில்லை - ரிசர்வ் வங்கி அம்பலம்
மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்கத்துக்கான நோக்கம் நிறைவேறவில்லை என ரிசர்வ் வங்கி அம்பலப்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, மக்களிடம் பணப்புழக்கத்தை (ரொக்க பரிமாற்றம்) குறைப்பதற்காகவும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறியது. ஆனால் இந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பதை ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.


கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதே ஆண்டு நவம்பர் 4-ந் தேதி நாட்டில் இருந்த பணப்புழக்கத்தின் மதிப்பு ரூ.17.90 லட்சம் கோடி ஆகும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந் தேதி நிலவரப்படி இந்த மதிப்பு ரூ.19.60 லட்சம் கோடியாக இருந்தது. அந்தவகையில் 9.5 சதவீதம் உயர்வைத்தான் அடைந்து இருக்கிறது.

இதைப்போல பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏ.டி.எம். மூலம் பணம் எடுப்பது குறைந்து, டிஜிட்டல் பரிமாற்றம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதிலும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.2.54 லட்சம் கோடியை மக்கள் ஏ.டி.எம்.கள் மூலம் எடுத்துள்ளனர். ஆனால் கடந்த ஆகஸ்டு மாதத்தில் ரூ.2.75 லட்சம் கோடி ஏ.டி.எம். மூலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் 8 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.

அதேநேரம் செல்போன் மூலமான பணப்பரிமாற்றம் மட்டும் அரசின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமைந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் ரூ.1.13 லட்சம் கோடியாக இருந்த செல்போன் பணப்பரிமாற்றம், கடந்த ஆகஸ்டு மாதத்தில் ரூ.2.06 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது.

மேற்கண்ட தகவலை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. மத்தியில் பா.ஜனதா இல்லாத அரசு; அகிலேஷ் யாதவ், மாயாவதியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
மத்தியில் பா.ஜனதா இல்லாத அரசை அமைப்பதில் தீவிரம் காட்டும் சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதியை சந்தித்து பேசியுள்ளார்.
2. இதுவரை இல்லாத அளவிற்கு சரக்குகள் ஏற்றுமதி உயர்ந்து இருக்கும்
சென்ற நிதி ஆண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு சரக்குகள் ஏற்றுமதி உயர்ந்து இருக்கும் மத்திய அரசு அதிகாரி நம்பிக்கை
3. லாபம் ஈட்டும் துணை நிறுவனங்களின் பங்குகளை பட்டியலிட திட்டம்
மத்திய அரசு, பொதுத்துறையில் லாபம் ஈட்டும் துணை நிறுவனங்களின் பங்கு
4. மத்திய அரசு, தேர்தல் கமிஷன் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை - சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது
வேட்பாளர்கள் குற்றவழக்குகளை விளம்பரம் செய்யவில்லை என்று மத்திய அரசு, தேர்தல் கமிஷன் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் விதமாக சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.
5. காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடத்தாததால் மத்திய அரசு மீது மெகபூபா முப்தி விமர்சனம்
காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகாததால் மத்திய அரசை மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.