தேசிய செய்திகள்

சத்தீஷ்கர் சட்டமன்ற தேர்தல்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இன்று பிரசாரம் + "||" + PM Modi to campaign in Bastar, Rahul Gandhi in Kanker on Nov 9

சத்தீஷ்கர் சட்டமன்ற தேர்தல்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இன்று பிரசாரம்

சத்தீஷ்கர் சட்டமன்ற தேர்தல்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இன்று பிரசாரம்
சத்தீஷ்கர் சட்டமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி, ராகுல் காந்தி இன்று அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
ராய்பூர், 

90 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட சட்டீஷ்கர் சட்டமன்றத்துக்கு வரும்  நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.  இதில் முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான பிரசாரம் வரும் சனிக்கிழமை மாலையுடன் நிறைவடைகிறது. 

இதையொட்டி, சட்டீஷ்கரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக, டெல்லியில் இருந்து சட்டீஷ்கர் மாநிலம் ராய்பூருக்கு காலை 11.20 மணியளவில் வரும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பஸ்தார் மாவட்டம் ஜெகதால்பூருக்கு மோடி செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம் செய்கிறார். இதையடுத்து, ராய்பூர் திரும்பும் மோடி, பின்னர் அங்கிருந்து டெல்லி செல்கிறார். 

அதேபோல், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சத்தீஷ்கரில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது கங்கர் மாவட்டம் பங்கன் ஜோர், கைர்கர் மாவட்டம், ரஜ்நந்த்கோன் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் 5 பிரச்சார கூட்டங்களில் ராகுல் பேசுகிறார். இதன்பின்னர் ஜெகதால்பூரில் காங்கிரஸ் தொண்டர்களை ராகுல் காந்தி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய பிரதேசம், மிசோரம் மாநில வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற பிரதமர் அறிவுறுத்தல்
மத்திய பிரதேசம், மிசோரம் மாநில வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
2. சட்டீஷ்கரில் 62 நக்சலைட்டுகள் சரண் ! பாதுகாப்பு படைக்கு ராஜ்நாத்சிங் பாராட்டு
விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சட்டீஷ்கரில் 62 நக்சலைட்டுகள் சரண் அடைந்துள்ளனர்.