உலக செய்திகள்

அமெரிக்க துணை ஜனாதிபதி அடுத்த வாரம் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் :வெள்ளை மாளிகை + "||" + US Vice President Mike Pence To Meet PM Modi Next Week: White House

அமெரிக்க துணை ஜனாதிபதி அடுத்த வாரம் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் :வெள்ளை மாளிகை

அமெரிக்க துணை ஜனாதிபதி அடுத்த வாரம் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் :வெள்ளை மாளிகை
அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சன் அடுத்த வாரம் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அடுத்த வாரத்தில் 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது அமெரிக்கா- ஆசியன் உச்சி மாநாடு, சிங்கப்பூரில் நடைபெறும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்கிறார். வழக்கமாக இந்த மாநாடுகளில் அமெரிக்க அதிபர் கலந்து கொள்வதுதான் வாடிக்கையாகும். இருந்த போதிலும், அதிபர் டொனால்டு டிரம்ப் கோரிக்கையை ஏற்று நிகழாண்டு துணை ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார். 

தனது நான்கு நாடுகளின் சுற்றுப்பயணத்தின்  போது, பிரதமர் மோடியையும் மைக் பென்ஸ் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது, இருநாட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிகிறது.

ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மற்றும் பபுவா நியூ கினியா ஆகிய நாடுகளில் நவம்பர் 11 முதல் 18 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்யும் மைக் பென்ஸ், அமெரிக்கா- ஆசியன் உச்சி மாநாடு, சிங்கப்பூரில் நடைபெறும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்கிறார். இந்த பயணத்தின் போது, ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, சிங்கப்பூர் பிரதமர் லீ ஹூசைன் லூங், பபுவா நியூ கினியா பிரதமர் பீட்டர் ஒ நெயில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மேரிசன் ஆகியோரை சந்திக்க உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய தேர்தல் நேர்மையாக நடந்துள்ளது : அமெரிக்கா கருத்து
இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதையொட்டி இந்திய தேர்தல்களின் நியாயத்தன்மை மற்றும் நேர்மை குறித்து தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
2. அமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம்: ஹூவாய் நிறுவனம்
அமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம் என்று ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
3. அமெரிக்காவில் ‘எப்-16’ போர் விமானம், கட்டிடத்தின் மீது மோதியதால் பரபரப்பு
அமெரிக்காவில் ‘எப்-16’ போர் விமானம், கட்டிடத்தின் மீது மோதிய விபத்தில் விமானி உள்பட 6 பேர் காயத்துடன் தப்பினர்.
4. அமெரிக்காவில் மரத்தின் மீது சொகுசு கார் மோதி, 2 சீக்கியர்கள் பலி
அமெரிக்காவில் மரத்தின் மீது சொகுசு கார் மோதிய விபத்தில், 2 சீக்கியர்கள் பலியாயினர்.
5. அமெரிக்காவில் திறன் அடிப்படையிலான கிரீன் கார்டுகளின் எண்ணிக்கை 57% அதிகரிக்கும்
திறன் அடிப்படையிலான கிரீன் கார்டுகளின் எண்ணிக்கை 57% அதிகரிக்க அமெரிக்கா திட்டம்