கிரிக்கெட்

சர்ச்சைக்குரிய பேச்சுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கம் + "||" + Virat Kohli clarifies 'leave India' remark after social media backlash

சர்ச்சைக்குரிய பேச்சுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கம்

சர்ச்சைக்குரிய பேச்சுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கம்
சர்ச்சைக்குரிய பேச்சுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியிடம் சிறப்பு வாய்ந்த திறமை இருப்பதாக தெரியவில்லை. இந்திய வீரர்களை காட்டிலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தையே நான் மிகவும் ரசிப்பேன் என்று ரசிகர் ஒருவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவால் கோலி கடும் கோபத்திற்கு உள்ளானார். ‘மற்ற நாடுகளை நேசித்துக்கொண்டு அந்த ரசிகர் ஏன் இந்தியாவில் வசிக்க வேண்டும். இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது வாழலாம்’ என்று கோலி சாடினார். கோலியின் கருத்து சர்ச்சையை கிளப்பியது. 

விராட் கோலியை ரசிகர்களும், நெட்டிசன்களும் வறுத்தெடுத்த நிலையில், மழுப்பலாக டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.  விராட் கோலி கூறியதாவது: “ ரசிகர்கள் என்னை விமர்சனம் செய்யவில்லை என்றே நான் கருதுகிறேன். என்னை விமர்சனம் செய்தால் அதோடு நானும் இணைந்துகொள்வேன். நான் பேசிய வீடியோ என்பது, ‘இப்படிப்பட்ட இந்தியர்களும்’ இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுத்தான் பேசினேன்.

என்னைப் பொறுத்தவரை எந்த நாட்டு கிரிக்கெட் வீரரை யாரும் ரசிக்கலாம். அதில் தேர்வு செய்வதில் நான் சுதந்திரம் இருப்பதை விரும்புபவன். நான் பேசியதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பண்டிகை காலத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். அனைவருக்கும் அன்பும், அமைதியும் கிடைக்கட்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐசிசி ஒருநாள், டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி தேர்வு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அறிவித்த சிறந்த ஒருநாள் அணி, டெஸ்ட் அணி ஆகியவற்றுக்கு கேப்டனாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.
2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; விராட் கோலி சதம் விளாசல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் விராட் கோலி சதம் விளாசியுள்ளார்.
3. ராகுல்,பாண்ட்யாவின் கருத்தை இந்திய அணி ஆதரிக்கவில்லை: விராட் கோலி
ராகுல், பாண்ட்யாவின் கருத்தை இந்திய அணி ஆதரிக்கவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
4. என்னுடைய மிகப்பெரிய சாதனை : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது என்னுடைய மிகப்பெரிய சாதனை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
5. மெல்போர்ன் டெஸ்ட்: முதல் நாளில் இந்திய அணி சிறப்பான ஆட்டம்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்துள்ளது.