தேசிய செய்திகள்

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த 6 சீனர்கள் நேபாள போலீசிடம் ஒப்படைப்பு + "||" + Six Chinese nationals inadvertently enter India, handed over to Nepal Police

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த 6 சீனர்கள் நேபாள போலீசிடம் ஒப்படைப்பு

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த 6 சீனர்கள் நேபாள போலீசிடம் ஒப்படைப்பு
இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த 6 சீனர்கள் நேபாள போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பராய்ச் (உ.பி), 

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த 6 சீனர்களை பிடித்த இந்திய பாதுகாப்பு படையினர் நேபாள நாட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். நேபாளத்தில் உள்ள ரூபைதீஹா எல்லை வழியாக இந்திய பகுதிக்குள், இரண்டு பெண்கள் உட்பட ஆறு சீன நாட்டவர்கள்  நுழைந்தனர். 

இதைக்கவனித்த இந்திய பாதுகாப்பு படையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நேபாள்கஞ்ச் பகுதியில் உள்ள பகேஷ்வரி கோவிலில் வழிபாடு நடத்த ஆறு பேரும் சென்றதும், அப்போது தவறுதலாக இந்திய பகுதிகளுக்குள் நுழைந்ததும் தெரியவந்தது. 

பிடிபட்ட ஆறு பேரிடம் சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் கிடைக்காததால், நேபாள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மொழிப்பிரச்சினை காரணமாக விசாரணை முடிய சற்று நேரம் எடுத்துக்கொண்டதாகவும், இதனால், வனத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்க வைக்கபட்டதாகவும் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. இமயமலையில் தென்பட்டது பனிமனிதனின் கால் தடமா? நேபாளம் விளக்கம்
இமயமலையில் தென்பட்டது எட்டி எனப்படும் பனிமனிதனின் கால் தடமா? இல்லையா? என்பது பற்றி நேபாளம் விளக்கம் அளித்துள்ளது.
2. நேபாளத்தில் நில அதிர்வு
நேபாளத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
3. ஆதார் அட்டையை பயண ஆவணமாக நேபாளம், பூடான் நாடுகளில் பயன்படுத்தலாம்; மத்திய உள்துறை அமைச்சகம்
ஆதார் அட்டையை பயண ஆவணமாக நேபாளம், பூடான் நாடுகளில் பயன்படுத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4. காஷ்மீர்: எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் சுட்டுக்கொலை
காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.