தேசிய செய்திகள்

ஆப்கன் தலீபான்களுடன் முதல் முறையாக பேச்சு நடத்தும் இந்தியா + "||" + In A First, India To Be In Talks With Taliban At "Non-Official" Level

ஆப்கன் தலீபான்களுடன் முதல் முறையாக பேச்சு நடத்தும் இந்தியா

ஆப்கன் தலீபான்களுடன் முதல் முறையாக பேச்சு நடத்தும் இந்தியா
ஆப்கன் தலீபான்களுடன் முதல் முறையாக இந்தியா அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது.
 மாஸ்கோ,

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து ரஷியா ஏற்பாட்டின்பேரில் மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா அதிகாரப்பூர்வமில்லாத முறையில் கலந்து கொள்ளவுள்ளது.

ரஷியாவில் கடந்த செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி இந்த பேச்சுவார்த்தைக்கு முதலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தான் நாடு திடீரென விலகியதால், அந்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை

இதைத் தொடர்ந்து, மாஸ்கோவில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ரஷியா தற்போது 2-ஆவது முறையாக ஏற்பாடு செய்துள்ளது. இதில் தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதுதவிர, ஆப்கானிஸ்தான், இந்தியா, ஈரான், சீனா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், அமெரிக்கா மற்றும் சில நாடுகளுக்கும் ரஷியா அழைப்பு விடுத்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார்,  ”பேச்சுவார்த்தையில் இந்தியா அதிகாரப்பூர்வமில்லாத முறையில் கலந்து கொள்ளும். ஆப்கானிஸ்தானில் அமைதி, சீரமைப்பு மேற்கொள்ள எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது” என்றார்.

அண்மையில் டெல்லிக்கு  வந்த ரஷ்ய அதிபர் புதின்- நரேந்திர மோடி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தானில் ரஷ்யா மேற்கொள்ளும் அமைதி முயற்சிக்கு இந்தியா ஒத்துழைக்கும் என உறுதி அளிக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பல் ரோந்து பணி குறித்து பாக்.கவலை: இந்தியா பதிலடி
ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பல் ரோந்து பணி குறித்து கவலை தெரிவித்த பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
2. இலங்கை நாடாளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல்: அமெரிக்கா கருத்து
இலங்கையில் உச்ச கட்ட அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், அமெரிக்கா கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
3. உலகைச் சுற்றி
ஆப்கானிஸ்தானில் டாக்கார் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.
4. ‘இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்கவில்லை என்றால், இந்தியாவில் இருக்கவேண்டாம்’ விராட் கோலி ஆவேசம்
‘இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்கவில்லை என்றால், இந்தியாவில் இருக்கவேண்டாம்’ என விராட் கோலி ரசிகருக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
5. ஈரான் சபஹார் துறைமுகப்பணிகள் : இந்தியாவுக்கு அனுமதி அளித்தது அமெரிக்கா
ஈரானில் சபஹார் துறைமுகப்பணிகள் மேற்கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் அளித்துள்ளது.