உலக செய்திகள்

ஜனநாயகத்திற்காக போராடுவதை கைவிட்டு விடாதீர்கள்: இலங்கை மக்களுக்கு விக்ரமசிங்கே கோரிக்கை + "||" + wickremesinghe urges citizens to continue fight for democrazy

ஜனநாயகத்திற்காக போராடுவதை கைவிட்டு விடாதீர்கள்: இலங்கை மக்களுக்கு விக்ரமசிங்கே கோரிக்கை

ஜனநாயகத்திற்காக போராடுவதை கைவிட்டு விடாதீர்கள்: இலங்கை மக்களுக்கு விக்ரமசிங்கே கோரிக்கை
ஜனநாயகத்திற்காக போராடுவதை கைவிட்டு விடாதீர்கள் என்று இலங்கை மக்களுக்கு விக்ரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு,

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதில் கடந்த மாதம் 26–ந் தேதி சிறிசேனா அதிரடியாக ரனில் விக்ரம சிங்கேயை நீக்கி விட்டு, ராஜபக்சேயை பிரதமராக நியமித்தார். ஆனால் ரனில் விக்ரம சிங்கே, ‘‘நான்தான் பிரதமர்’’ என்று அறிவித்தார்.

இருவரில் யார் பிரதமர் என்ற அதிகாரப்போட்டி தொடர்கிறது. ரனில் விக்ரம சிங்கே பிரதமர் மாளிகையை விட்டு வெளியேற மறுத்து விட்டார். சபாநாயகர் கரு ஜெயசூரியா அவரைத்தான் பிரதமராக அங்கீகரித்துள்ளார். இருப்பினும் நாடாளுமன்றத்தை கூட்டி, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. நாடாளுமன்றத்தை 16–ந் தேதி வரை முடக்கி வைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார்.இப்போது நாடாளுமன்றம் 14–ந் தேதி கூடும் என அவர் அறிவித்தார். 

இலங்கையில், நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு எதிராகவும் ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாகவும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று,  ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக, கொழும்பு நகரில் வியாழக்கிழமை வாகனப் பேரணி நடைபெற்றது.இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்த ரணிலின் ஆதரவாளர்கள், அதிபர் மைத்ரிபால சிறீசேனாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், தனக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கிய போராடிய மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ரனில் விக்ரமசிங்கே, ஜனநாயகத்திற்காக போராடுவதை கைவிட்டு விடாதீர்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி வெற்றி
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
2. இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றம் - மார்ஷ் சகோதரர்கள் நீக்கம்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்ஷ் சகோதரர்கள் நீக்கப்பட்டனர்.
3. இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அபார வெற்றி
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
4. இலங்கைக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி 585 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 585 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
5. இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி 178 ரன்னில் ஆல்-அவுட்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 178 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.