சினிமா செய்திகள்

சர்கார் இயக்குனர் ஏ.ஆர் முருகதாசை கைதுசெய்ய தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு + "||" + Chennai court orders ban on Sargar director AR Murugadoss

சர்கார் இயக்குனர் ஏ.ஆர் முருகதாசை கைதுசெய்ய தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு

சர்கார் இயக்குனர் ஏ.ஆர் முருகதாசை கைதுசெய்ய தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு
சரக்கார் பட இயக்குனர் ஏ.ஆர் முருகதாசை கைதுசெய்ய தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிடு உள்ளது
சென்னை

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் . கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாருக்கு ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படும் கோமளவல்லி எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தியேட்டர் உரிமையாளர் சஙகம் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில் நேற்றி இரவு  சர்கார் இயக்குனர் ஏ.ஆர் முருகதாசின் வீட்டின் கதவை நள்ளிரவு  போலீசார் நீண்ட நேரம் தட்டியதாகவும் அவர் இல்லை என்றதும் திரும்பி சென்று விட்டதாகவும். அவர தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார். போலீசார் இதனை வழக்கமான ரோந்துபணிதான் என குறிப்பிட்டனர் . 

இந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்   இன்று முன்ஜாமீன் கேட்டு   சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து  இருந்தார். அந்த மனு  நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வருகிற 27 ந்தேதிவரை ஏ.ஆர். முருகதாசை கைது செய்ய தடைவிதித்து உத்தரவிட்டு உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சர்கார் படத்திற்கு எதிராக நடிகர் விஜய் மீது கேரளாவில் வழக்கு
சர்கார் படத்திற்கு எதிராக நடிகர் விஜய் மீது கேரளாவில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
2. எம்.பி., எம்.எல்.ஏக்களால் எப்படி டி.வி சேனலை தொடங்க முடிகிறது? -நடிகர் விஷால் கேள்வி
புதிதாக ஒரு செய்தி சேனலை உருவாக்க எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்களுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
3. ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு
ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது என அதிகாரபூர்வமாக் அறிவிக்கப்பட்டு உள்ளது. #Petta #Rajinikanth
4. தமிழ்சினிமா உலகை நடுங்க வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது? வலைதளத்தில் ஏற்றுவது யார்?
தமிழ்சினிமா உலகையே நடுங்க வைக்கும் தமிழ்ராக்கர்ஸ் எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றி பார்ப்போம்.
5. டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை
மேடையில் வைத்து முத்தமிட்ட பிரபல தொழில்நுட்ப கலைஞர், அதிர்ச்சியடைந்த காஜல் அகர்வால்.