தேசிய செய்திகள்

மத ரீதியில் பிரசாரம் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. கே.எம். சாஜியை தகுதி நீக்கம் செய்தது ஐகோர்ட்டு + "||" + Kerala high court disqualifies Muslim League MLA

மத ரீதியில் பிரசாரம் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. கே.எம். சாஜியை தகுதி நீக்கம் செய்தது ஐகோர்ட்டு

மத ரீதியில் பிரசாரம் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. கே.எம். சாஜியை தகுதி நீக்கம் செய்தது ஐகோர்ட்டு
மத ரீதியில் பிரசாரம் மேற்கொண்டதாக முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. கே.எம். சாஜியை கேரளா ஐகோர்ட்டு தகுதி நீக்கம் செய்துள்ளது.

திருவனந்தபுரம்,


கேரளாவில் 2016-ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது அழீக்கோடு தொகுதியில் முஸ்லீம் லீக் வேட்பாளர் கே.எம். சாஜி வெற்றிப்பெற்றார். மார்க்சிஸ்ட் ஆதரவுடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட நிகேஷ் குமார் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் 2016 தேர்தலில் சாஜி மதத்தின் அடிப்படையில் பிரசாரங்களை மேற்கொண்டார் என்று குற்றம் சாட்டி நிகேஷ் குமார் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற போது இருதரப்பும் தங்கள் வாதங்களை முன்வைத்தது.

இந்நிலையில் வழக்கை விசாரித்துவந்த ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பை வழங்கியது. மத ரீதியில் பிரசாரம் மேற்கொண்டதாக முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. கே.எம். சாஜியை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. சட்டசபை சபாநாயகர் மற்றும் மாநில தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கையை எடுக்க கேட்டுக்கொண்ட ஐகோர்ட்டு அழீக்கோடு தொகுதியில் புதியதாக தேர்தலை நடத்த உத்தரவிட்டது. சாஜி ரூ. 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது. அதேநேரம் தன்னை வெற்றிப்பெற்றதாக அறிவிக்க கோரிய நிகேஷ் குமாரின் கோரிக்கையை நிராகரித்தது. இஸ்லாமியர்கள் இஸ்லாமியர் அல்லாத வேட்பாளருக்கு வாக்களிக்ககூடாது என துண்டு சீட்டுக்களை சாஜி வழங்கியதாக நிகேஷ் குமார் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

ஐகோர்ட்டு தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டதால் இனி, கே.எம். சாஜி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட சாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.